MS Dhoni Produced Tamil Movie : எம்.எஸ்.தோனியை கிரிக்கெட் வீரராக அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் தமிழில் ஒரு தயாரிப்பாளராக களமிறங்கி ஒரு படத்தை தயாரித்திருந்தார். அதைப்பற்றி பார்க்கலாம்.
தோனி என்ற பெயரைக் கேட்டாலே கிரிக்கெட்டில் அவர் செய்த சாதனைகள் தான் நியாபகத்துக்கு வரும். 2007-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையை வென்றதன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் தோனி. இதையடுத்து ஒருநாள் அணிக்கும் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர், இந்தியாவின் 28 வருட கனவாக இருந்த ஒருநாள் கிரிக்கெட் உலககக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்தார். 2011-ம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பைனலில், சிக்சருடன் வெற்றிக்கனியை எட்டி இருப்பார் தோனி. அந்த காட்சியை இன்று பார்த்தாலும் புல்லரிக்கும்.
26
தோனியின் திடீர் ஓய்வு
முடிவுகள் எடுப்பதில் கில்லாடியான தோனி, தன்னுடைய கெரியர் தொடர்பான முடிவுகளையும் யாரும் எதிர்பாராத நேரத்தில் எடுத்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுப்பார். அந்த வகையில் இவர் கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முடிவில் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின்னர் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வந்த அவர், கடந்த 2020-ம் ஆண்டு அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.
36
ஐபிஎல் லெஜண்ட்
ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்தார் எம்.எஸ்.தோனி. முதல் சீசனிலேயே பைனல் வரை சென்ற அவர் தலைமையிலான சிஎஸ்கே அணி ராஜஸ்தானிடம் தோற்றது. இதையடுத்து 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதன்முறையாக கோப்பையை வென்றது சிஎஸ்கே. பின்னர் 2011-ம் ஆண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். இதுமட்டுமின்றி இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் 2018-ம் ஆண்டு சிஎஸ்கே கம்பேக் கொடுத்தபோதும் சாம்பியன் ஆனது. அதோடு நிற்காமல் தோனி தலைமையில் 2021 மற்றும் 2023-லும் கோப்பையை தட்டிச் சென்றது சிஎஸ்கே.
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற கேப்டன் என்கிற பெருமையை பெற்றிருந்த தோனி, தற்போது ஐபிஎல்-லிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதோடு அவர் வரும் ஐபிஎல் தொடர் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தோனி சென்னையில் ஃபேர்வெல் மேட்ச் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் இந்த திடீர் ஓய்வு முடிவு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
56
தோனியின் சென்னை கனெக்ஷன்
தோனிக்கு சென்னைக்கு மிகப்பெரிய கனெக்ஷன் உள்ளது. அவரை ரசிகர்கள் தல என செல்லமாக அழைப்பார்கள். அவரே ஒரு பேட்டியில் தான் தமிழ்நாட்டின் தத்துப்பிள்ளை என கூறி இருக்கிறார். அதுமட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி அறிமுகமான போட்டி சேப்பாக்கத்தில் தான் நடைபெற்றது. டெஸ்ட்டில் அவர் தன்னுடைய கெரியர் பெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்ததும் சென்னை சேப்பாக்கத்தில் தான். இப்படி ஏராளமான சாதனைகளை சென்னையில் படைத்திருக்கும் தோனி, அதே நம்பிக்கையோடு கடந்த 2023-ம் ஆண்டு சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார்.
66
சினிமாவில் தப்பு கணக்கு போட்ட தோனி
2023-ம் ஆண்டு அவர் தனது தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் எல்.ஜி.எம் என்கிற திரைப்படத்தை தயாரித்தார். தோனி தயாரித்துள்ள படம் என்பதால் அதற்கு மிகப்பெரிய அளவில் ஹைப் இருந்தது. அப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் யோகிபாபு, நதியா, இவானா ஆகியோரும் இப்படத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி இருந்தார். இப்படம் தோனிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. கிரிக்கெட் வேறு சினிமா வேறு என்பதை இப்படத்தின் ரிசல்ட் தோனிக்கு நன்கு உணர்த்தியது. எல்ஜிஎம் திரைப்படம் அட்டர் பிளாப் ஆனதால் அடுத்து தமிழ் சினிமா பக்கம் அவர் தலைகாட்டவே இல்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.