Jailer 2 Actor investment Story : நெல்சன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினியின் நண்பனாக நடித்தவர் நிஜ வாழ்க்கையில் ஒரு தரமான முதலீடு மூலம் 100 கோடி அள்ளி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய அளவிலான வசூலை வாரிக்குவித்த படம் என்றால் அது ஜெயிலர் தான். இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவந்தன. இதில் கடந்த 2023ம் ஆண்டு ஜெயிலர் படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆனது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த இப்படம் அதிரி புதிரியான வெற்றியை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடிக்கு மேல் அள்ளியது. அப்படத்திற்கு முன்பு வரை தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வந்த ரஜினிக்கு ஜெயிலர் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.
25
ஜெயிலர் 2 சம்பவம்
இதன்பின்னர் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவெடுத்து அதற்கான வேலைகளில் இறங்கினார் நெல்சன். ஜெயிலர் முதல் பாகத்தைவிட அதன் இரண்டாம் பாகத்தை மிக பிரம்மாண்டமாக உருவாக்கிய அவர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜெயிலர் 2 படத்தை ரிலீஸ் செய்தார். வெளியானதில் இருந்து பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வரும் ஜெயிலர் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்து வருகிறது. ஒரு மாதத்தைக் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது ஜெயிலர் 2.
35
பாக்ஸ் ஆபிஸ் வின்னர்
அப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் சாதனைகளை படைத்து வருகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் அள்ளிய திரைப்படம் என்கிற சாதனையை ஜெயிலர் 2 படைத்துள்ளது. ஜெயிலர் 2 திரைப்படம் தற்போது 830 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி வெற்றிநடைபோட்டு வருகிறது. ஜெயிலர் படத்தின் இரண்டு பாகங்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ.1400 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி இருக்கின்றன. இருப்பினும் தமிழ் சினிமாவின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ள 1000 கோடி வசூல் கனவு இன்னும் எட்டப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தின் வெற்றிக்கு அதில் ரஜினியுடன் நடித்த நடிகர்களும் முக்கிய காரணம். மலையாள நடிகர் மோகன்லால், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் இப்படத்தில் ரஜினிக்கு நண்பர்களாக நடித்திருந்தனர். இவர்களில் ஜாக்கி ஷெராஃப் ஒரு தரமான சம்பவத்தை செய்திருக்கிறார். அது சினிமாவில் அல்ல பிசினஸில்... அவர் கடந்த 1995ம் ஆண்டு 1 லட்சம் முதலீடு செய்தது அவருக்கு 2012-ம் ஆண்டு 100 கோடியாக திரும்ப கிடைத்துள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
55
ஜாக்கி ஷெராஃப் 100 கோடி அள்ளியது எப்படி?
1995-ம் ஆண்டு சோனி டிவி ஆரம்பிக்கும்போது ஜாக்கி ஷெராஃப் உள்பட சில அதில் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள். அதில் ஜாக்கி ஷெராஃப் முதலீடு செய்தது வெறும் 1 லட்ச ரூபாய் தான். இதையடுத்து 2012-ம் ஆண்டு சோனி டிவி தங்களின் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் இருந்து ஒட்டுமொத்தமாக தங்கள் பங்குகளை வாங்கிவிட்டார்கள். அப்படி அவர் பங்குகளை வாங்கும் போது ஜாக்கி ஷெராஃப்புக்கு 100 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. 1 லட்ச ரூபாய் முதலீடு செய்து 100 கோடி ரூபாய் அள்ளிய அவரின் இந்த முதலீடு ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகவே பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.