Nayanthara : தொடர் தோல்விகள்... சரியும் நயன்தாராவின் மார்க்கெட்! நெக்ஸ்ட் என்ன செய்யப்போகிறார் லேடி சூப்பர் ஸ்டார்?

Published : Nov 16, 2026, 08:47 PM IST

Nayanthara's Films Failing at the Box Office : நடிகை நயன்தாரா, தமிழில் தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். அவரின் லைன் அப்பில் அடுத்ததாக உள்ள படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

PREV
14
நயன்தாராவை துரத்தும் தோல்விகள்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. மலையாளத் திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்து, தனது நடிப்பாலும் கடின உழைப்பாலும் முன்னணி நடிகையாக உயர்ந்தவர். ஒரு காலத்தில் அவர் நடிக்கும் படங்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு தற்போது சற்றுக் குறைந்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதது திரையுலகில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

24
மூக்குத்தி அம்மன் 2 கொடுத்த ஏமாற்றம்!

சமீபத்தில் சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. முதல் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக, இரண்டாம் பாகத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அந்த எதிர்பார்ப்பைத் திரைப்படம் வசூலில் முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, பிற மொழிகளில் இப்படத்திற்குப் பெரிய வரவேற்பு கிடைக்காத நிலையில், தமிழகத்திலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் அமையவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் சுமார் ரூ. 20 கோடிக்கும் சற்று அதிகமாகவே வசூல் செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது இந்த வசூல் ஏமாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு இந்த ஆண்டில் வெளியான 'ஹாய்' திரைப்படமும் நயன்தாராவுக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அடுத்தடுத்து இரண்டு படங்கள் சறுக்கியிருப்பது அவரது தற்போதைய திரைப்பயணம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

34
கடந்த சில ஆண்டுகளாகத் தொடரும் சறுக்கல்!

நயன்தாராவின் சமீபத்திய படங்களின் பட்டியலைப் பார்த்தால், வெற்றிப் படங்களைவிட தோல்வி படங்களே அதிகமாகத் தெரிகின்றன. கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான 'டெஸ்ட்' திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனம் பெறவில்லை. அதேபோல், 2024-ம் ஆண்டில் அவரது நடிப்பில் புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை.

இதற்கு முந்தைய 2023-ம் ஆண்டில் வெளியான 'அன்னபூரணி', 'இறைவன்' ஆகிய படங்களும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. 2022-ம் ஆண்டு வெளியான 'கனெக்ட்', 'ஓ2' திரைப்படங்களும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறத் தவறின. அந்த ஆண்டில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோருடன் இணைந்து நடித்த 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் மட்டுமே ஓரளவுக்கு வெற்றியைப் பெற்றது.

அதற்கு முன்பு 2021-ல் வெளியான 'அண்ணாத்த', 'நெற்றிக்கண்' மற்றும் 2020-ல் வெளியான 'தர்பார்' ஆகிய படங்களும் நயன்தாராவுக்குத் தனிப்பட்ட வெற்றியைத் தேடித்தரவில்லை.

44
லேடி சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தது என்ன?

ஒரு காலத்தில் நயன்தாராவின் பெயரை மட்டுமே நம்பி படங்களைத் தயாரிக்கவும், வெளியிடவும் தயாரிப்பாளர்கள் முன்வந்தனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியிருந்தார். ஆனால், தற்போது அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அவரது மார்க்கெட் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன.

இருப்பினும், நயன்தாராவின் நடிப்புத் திறமைக்கும் ரசிகர்களிடையே இருக்கும் செல்வாக்கும் இன்னும் குறைவில்லை. சரியான கதையையும் வலுவான கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்தால் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது. அடுத்தடுத்து அவர் தேர்ந்தெடுக்கப்போகும் திரைப்படங்கள்தான் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதைத் தீர்மானிக்கும். அடுத்ததாக ரஜினியுடன் தர்மன், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4 போன்ற படங்களில் நடிக்கிறார் நயன்தாரா. அப்படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories