Dare Devil Villain : அஜித்துக்கு வில்லனாகும் ரஜினியின் ஜிகிரிதோஸ்து... டேர் டெவில் படத்தின் அடிபொலி அப்டேட் இதோ

Published : Nov 16, 2026, 07:45 PM IST

Ajith Dare Devil Movie Villain : இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'டேர் டெவில்' படத்தில் வில்லனாக நடிக்க உள்ள மாஸ் ஹீரோ பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.

PREV
14
சிவராஜ்குமாரின் அடுத்த தமிழ் படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமாரும், கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாரும் ஒரே படத்தில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதுவும் சிவராஜ்குமார் இதில் ஹீரோவாக நடிக்கவில்லை, அஜித்துக்கு பயங்கரமான வில்லனாக நடிக்கிறார்! ஆம், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் அஜித்தின் புதிய படமான 'டேர் டெவில்'-ல் சிவராஜ்குமார் வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த செய்தி வெளியானதில் இருந்து ரசிகர்களிடையேயும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

24
தேடுதல் வேட்டை நடத்திய படக்குழு!

'டேர் டெவில்' படம் குறித்து ஏற்கனவே எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உள்ளன. அதிலும் குறிப்பாக, அஜித்துக்கு எதிரான பவர்ஃபுல்லான வில்லன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி சினிமா ரசிகர்களை வெகுவாக சிந்திக்க வைத்தது. இதோ அதற்கான விடை கிடைத்துவிட்டது. அஜித்துக்கு வில்லனாக சிவராஜ்குமார் களமிறங்குகிறார்.

இந்த தகவலை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா உறுதிபடுத்தியுள்ளார். படத்தில் வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலிமையானதாகவும், கதைக்கு மிக முக்கியமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கிறதாம். இதற்காக படக்குழு பல்வேறு நடிகர்களின் பெயர்களை பரிசீலித்து வந்துள்ளது. ஆனால், சிவராஜ்குமார் மீது அஜித்துக்கு தனிப்பட்ட மரியாதையும் அன்பும் இருப்பதால், இறுதியாக அவரையே தேர்வு செய்ததாக சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

34
கதை கேட்டதும் உடனே கிரீன் சிக்னல்!

இந்த படத்திற்காக படக்குழு சுமார் மூன்று-நான்கு மாதங்களுக்கு முன்பே சிவராஜ்குமாரை தொடர்புகொண்டதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நேரில் சென்று கதையை விவரித்ததும், சிவராஜ்குமார் உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அஜித்தும் சிவராஜ்குமாருடன் பேசியதாக தெரிகிறது. நவம்பர் 17 அல்லது 18-ம் தேதியில் இருந்து சிவராஜ்குமார் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இந்த கட்ட படப்பிடிப்பு டிசம்பர் வரை நீடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
தமிழ் திரையுலகில் சிவராஜ்குமாருக்கு மீண்டும் ஒரு பெரிய பொறுப்பு!

தமிழ் படங்களில் சிவராஜ்குமாரின் அதிரடி நமக்கு புதிதல்ல. ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்தில் நரசிம்மா என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அவர், அதன்பிறகு 'கேப்டன் மில்லர்' மற்றும் 'ஜெயிலர் 2' படங்களிலும் நடித்திருந்தார். தற்போது அஜித் குமாரின் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகிவிட்டார். 'டேர் டெவில்' படத்தில் பிரபு, பார்த்திபன், ஸ்ரீலீலா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

அஜித்துக்கும் சிவராஜ்குமாருக்கும் இடையிலான நேரடி மோதல் இப்படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னட சூப்பர்ஸ்டாருக்கு அஜித் சவாலாக இருப்பாரா அல்லது அஜித்துக்கு சிவராஜ்குமாரின் வில்லன் அவதாரம் சிம்மசொப்பனமாக மாறுமா என்ற ஆர்வம் இப்போதே எழத் தொடங்கியுள்ளது. இந்த இரு உச்ச நட்சத்திரங்களின் மோதலை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories