Ayan : பூமத்திய ரேகை... அயன் ஆனது எப்படி? இந்த டைட்டிலுக்கு இத்தனை அர்த்தமா? பல வருடத்துக்கு பின் வெளிவந்த சீக்ரெட்

Published : Nov 24, 2026, 08:38 AM IST

Ayan Title Secret : கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, தமன்னா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன அயன் திரைப்படத்தின் டைட்டிலுக்கு என்ன அர்த்தம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

PREV
14
அயன் படத்தின் சுவாரஸ்ய பின்னணி

ஒரு திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்த பிறகும், அது தொடர்பான பழைய வீடியோக்களும் சுவாரசியமான தகவல்களும் மீண்டும் இணையத்தில் பேசப்படுவது அந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும். அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'அயன்' திரைப்படம் மீண்டும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. குறிப்பாக, இப்படத்திற்கு 'அயன்' என்று பெயர் வைக்கப்பட்டதற்கான காரணத்தை இயக்குனர் கே.வி. ஆனந்த் விளக்கிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி வெளியான அயன் திரைப்படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி. ஆனந்த். ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். மேலும் பிரபு, ஜெகன், கருணாஸ், ஆகாஷ்தீப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

24
அயன் படத்தின் தலைப்பு உருவானது எப்படி?

தற்போது வைரலாகி வரும் படத்தின் தொடக்க விழா வீடியோவில், அயன் என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியை கே.வி. ஆனந்த் சுவாரசியமாகப் பகிர்ந்துள்ளார். உண்மையில், இப்படத்திற்கு முதலில் 'பூமத்திய ரேகை' என்றுதான் பெயர் வைக்கத் திட்டமிட்டிருந்தார்களாம். பின்னர் அந்தப் பெயரை மாற்றி 'அயன்' என முடிவு செய்துள்ளனர்.

அயன் என்பது படைப்புக் கடவுளான பிரம்மாவின் மற்றொரு பெயராகும். படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் வாழ்க்கையின் நான்கு வெவ்வேறு நிலைகளைக் கடந்து செல்வதுடன், நான்கு விதமான தோற்றங்களிலும் இடம்பெறுகிறது. இதனை பிரம்மாவின் நான்கு முகங்களுடன் தொடர்புபடுத்தி இப்படத்திற்கு அயன் என்று பெயர் சூட்டியதாக கே.வி. ஆனந்த் விளக்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி, அயன் என்ற சொல்லுக்கு ஈடு இணையற்றவர், தோற்கடிக்க முடியாதவர், குறையற்றவர் எனப் பல்வேறு பொருள்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமஸ்கிருதத்தில் பாதை, பயணம், முன்னேற்றம் போன்ற அர்த்தங்களும் இந்தப் பெயருக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

34
சூர்யாவை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை!

அயன் திரைப்படத்தின் மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இப்படத்தின் கதையை கே.வி. ஆனந்த் ஆரம்பத்திலேயே சூர்யாவை மனதில் வைத்துத்தான் எழுதியிருக்கிறார். கதையை ஏவிஎம் நிறுவனத்திடம் கூறியபோது, வெளிநாடுகளில் உள்ள வித்தியாசமான இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கும் தயாரிப்பு நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன் காரணமாக ஆப்பிரிக்கா, நமீபியா, மலேசியா உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. குறிப்பாக, 'நெஞ்சே நெஞ்சே' பாடலில் இடம்பெற்ற அழகான வெளிநாட்டு காட்சிகள் அப்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

44
டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் நடித்த சூர்யா!

அயன் படத்தில் இடம்பெற்ற அதிரடியான சண்டைக் காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இப்படத்திற்காக சூர்யா பல சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் தானே நடித்துள்ளதாகவும், அவரது அர்ப்பணிப்பை இயக்குனர் கே.வி. ஆனந்தே வியந்து பாராட்டி இருந்தார்

வித்தியாசமான கதைக்களம், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள், சிறப்பான ஒளிப்பதிவு என பல அம்சங்களால் அயன் திரைப்படம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தது. இன்றளவும் சூர்யாவின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்றாக இப்படம் பார்க்கப்படுகிறது. படம் வெளியாகி 17 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையிலும், அப்படத்தை தற்போது டிவியில் போட்டாலும் அதற்கான டிஆர்பி ரேட்டிங் வேறலெவலில் இருக்கும். அந்த அளவுக்கு ரீ வாட்ச் வேல்யூ கொண்ட படமாக அயன் இருந்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories