Cheran vs Diwakar : சேரனை சீண்டிய திவாகர்... ஆதாரத்தை வெளியிட்டு வாட்டர்மெலன் ஸ்டாருக்கு குட்டு வைத்த சேரன்...!

Published : Nov 24, 2026, 06:56 AM IST

Cheran Befitting Reply to Diwakar : இயக்குநர் சேரனை சீண்டி வீடியோ வெளியிட்டு வந்த வாட்டர் மெலன் ஸ்டார் திவாகருக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார் சேரன். அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
சேரன் vs திவாகர்

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் திவாகர். தன்னைத் தானே 'வாட்டர் மெலன் ஸ்டார்' என்று அழைத்துக்கொள்ளும் இவர், தனது வீடியோக்களுக்கு கிடைக்கும் அதிகப்படியான வரவேற்பை வைத்து பல முன்னணி நடிகர்களைவிட தான் சிறப்பாக நடிப்பதாகவும் அவ்வப்போது கூறி வருகிறார். இவருடைய பேச்சுகள் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்துவதுடன், நெட்டிசன்களின் ட்ரோல்களுக்கும் ஆளாகி வருகிறது.

இந்நிலையில், ஜெயா தொலைக்காட்சியில் இயக்குனர் சேரன் தொகுத்து வழங்கும் 'யார் சரி' நிகழ்ச்சியில் வாட்டர் மெலன் திவாகர் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவர் பேசிய சில கருத்துகள் சேரனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தங்களுடைய பள்ளியில் படிப்புடன் சேர்த்து கலைத் திறன்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வளர்த்ததாக திவாகர் கூறியபோது, சேரன் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

24
சேரன் பேசியது என்ன?

அவர் கூறிய கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, "ஏய்... சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்காதீங்க" என்று கடுமையாகப் பதிலளித்தார். தொடர்ந்து திவாகருக்கு அறிவுரை வழங்கிய சேரன், ஒருவர் முதலில் தனது திறமையை செயலின் மூலம் நிரூபிக்க வேண்டும் என்றும், அதைவிடுத்து தேவையில்லாமல் தன்னைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொள்வது சரியான அணுகுமுறை அல்ல என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், "உங்களைப் பார்த்து பலரும் கிண்டல் செய்கிறார்கள், நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறார்கள், அளவுக்கு அதிகமாகப் பேசுகிறீர்கள் என்றும் விமர்சிக்கிறார்கள். உங்களுடைய தற்போதைய வளர்ச்சிக்கும், நீங்கள் பேசும் விதத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகவே பலருடைய புகார் இருக்கிறது" என்று தெரிவித்தார்.

34
சேரனை சீண்டிய திவாகர்

அதுமட்டுமின்றி, யாருடன் நம்மை ஒப்பிட்டுப் பேச வேண்டும் என்பதிலும் ஒரு வரம்பு இருக்க வேண்டும் என்று கூறிய சேரன், திவாகர் எடுத்த எடுப்பிலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் வழக்கம்போல் தன்னுடைய சேட்டையை ஆரம்பித்த திவாகர். சேரன் தன்னை அவமதித்துவிட்டதாகவும், தன்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் இப்படி செய்வதாகவும் கூறி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டதோடு, சேரனுக்கு எதிராக தன்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தப்பட இருப்பதாக பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

44
சேரன் கொடுத்த பதிலடி

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் குறித்து மெளனம் காத்து வந்த சேரன், தற்போது தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், “இதுவே உண்மையில் நடந்தது. அந்த நபரின் வாழ்க்கை கருதி அதை டெலிகாஸ்ட் செய்யாமல் தவிர்த்தோம். ஆனால் அவரே அதை வெளியில் கொண்டுவர காரணமாகிவிட்டார். முடிந்தவரை அமைதியாக பொறுமையாகத்தான் இருந்தோம். ஆனால் அவரை எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என தெரிந்தது. சிலர் நான் அவரை அனுமதித்திருக்கவே கூடாது எனவும், சிலர் சேரனுக்கு இது தேவையா எனவும் கேட்கிறார்கள், சொல்கிறார்கள்.

ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதை பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான். அவனை சரிசெய்து விடமாட்டோமா. இப்படியே விட்டால் எங்காவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர் என காப்பாற்றி புத்தி சொல்ல, சரிசெய்ய நினைப்பவன்.

ஒரு உயிர்போய்விட்டடால் அவனை நம்பி உயிர்கள இருக்குமே என கவலைப்படுபவன் நான். அவர் பேசுவதால என் படைப்புகள் தாழ்ந்துவிடப்போகிறதா என்ன? மரியாதை நான் காப்பாற்றும் கட்டிக்காக்கும் என் பெயரில் இல்லை. என் நடத்தையில் இருக்கிறது என நன்றாக அறிவேன். இதேநேரம் நாங்கள் அவரை வெளியேற்றி இருந்தால் இந்த சமூகம் இப்படித்தான் பேசுமா? அப்போதும் அவரை எப்படி அனுமதிக்காமல் விடலாம் சேரன் இப்படி நடக்கலாமா என பேசித்தான் இருப்பார்கள். ஆகையால் நான் அங்கு நடந்துகொண்டது மனிதாபிமானமே... கண்டிப்பே.. அது மற்றவர்கள் பார்வையில் புரியவில்லை என்பதற்காக நான் என்னை தொலைக்க தயாராக இல்லை” என சேரன் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories