திருமண வாழ்க்கையில் இணைந்த சூர்யா - சித்தார்த் பட இளம் நடிகை லிஜோ மோல்! வாவ்... வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்!

First Published | Oct 5, 2021, 6:52 PM IST

நடிகர் சித்தார்த் நடித்த 'சிவப்பு மஞ்சள் பச்சை', மற்றும் சூர்யாவின் 'ஜெய் பீம்' ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை லிஜோ மோல் (lijomol) தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இவரது லேட்டஸ்ட் வெட்டிங் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள லிஜோ மோல் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி மிக சிறப்பாக நடந்துள்ளது. இதுகுறித்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு இவருக்கு வாழ்த்துக்களும் குவிந்தவண்ணம் உள்ளது.

இவரது திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு இந்த தம்பதியை வாழ்த்தியுள்ளனர். பெரிதாக எந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விட வில்லை என கூறப்படுகிறது.

Tap to resize

தற்போது திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்துள்ள இளம் நடிகை லிஜோ மோல், மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படமான 'மகேஷின்டே பிரதிகாரம்' படத்தில் அறிமுகமானவர்.

முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பால் மலையாள ரசிகர்களை கவர்ந்த இவருக்கு, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது.  'கட்டப்பனையில் ரித்விக் ரோஷன்' மற்றும் 'ஹனி பீ 2.5 ' போன்ற படங்களில் நடித்தார்.

தமிழில் இவரது அறிமுகப்படம் 'தீதும் நன்றும்' ஆனால் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், இயக்குனர் சசி சித்தார்த் ஜோடியாக 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது நடிகர் சூர்யா வக்கீலாக நடித்து விரைவில் வெளியாக உள்ள, 'ஜெய் பீம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான இவர், தற்போது அருண் ஆண்டனி என்பவரை அக்டோபர் 4 ஆம் தேதி, அதாவது நேற்று கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மிகப்பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ள இந்த திருமணத்தில், வெள்ளை நிற சேலையில் தேவதை போல் ஜொலிக்கும் லிஜோ மோல்க்கு ரசிகர்கள்  பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!