அட்டகாசமான கவர்ச்சி உடையில்... பிக்பாஸ் நமீதா மாரிமுத்து கொடுத்த அட்ராசிட்டி போஸ்!!

First Published | Oct 5, 2021, 5:14 PM IST

பிக்பாஸ் சீசன் 5 (Biggboss seasson 5) நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ள நடிகையும், மாடலுமான (திருநங்கை) நமீதா மாரிமுத்துவின் (Transgender namitha marimuthu) லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ..

namitha marimuthu

தமிழகம் மட்டுமல்ல, உலக தொலைக்காட்சி நேயர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு விளையாடி வருபவர் நமீதா மாரிமுத்து.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், கடந்த நான்கு சீசன்களில் இல்லாத பல மாற்றங்களை பிக்பாஸ் குழுவினர் கொண்டு வந்துள்ளனர்.

Tap to resize

அதில் முக்கிய மாற்றமாக இம்முறை யாரும் எதிர்பாராத வண்ணமாக நமீதா மாரிமுத்து என்கிற திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

இதன் மூலம் தமிழ் பிக்பாஸ் சீசனில் முதன்முதலில் பங்கேற்றுள்ள திருநங்கை போட்டியாளர் என்ற பெருமையை இவருக்கு கிடைத்துள்ளது.

சரி இவர் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க... சென்னையை சேர்ந்தவர், மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் நமீதா.

2014ம் ஆண்டு திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை போட்டியில் வெற்றி பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். அதன்பிறகும் அவரது வெற்றிநடை நிற்கவில்லை.

2015ம் ஆண்டின் மிஸ் கூவாகம், 2018ம் ஆண்டில் மிஸ் இந்தியா என ஒரு கலக்கு கலக்கினார். ஸ்பெயினில் சர்வதேச திருநங்கை உலக போட்டியில் இந்திய போட்டியாளராக பங்கேற்று அசத்தியவர்.

நாடோடிகள் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முத்திரை பதித்த நமீதா, கொரோனா காலத்தில் ஏழை மக்களின் பசியை போக்கியவர்.

பல்வேறு சாதனைகள், புரிந்துள்ள இவர், தற்போது தன்னுடைய சமூகத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக உள்ளே அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.

குறிப்பாக ஒருவர் திருநங்கை என்பது தெரிந்தால், அவரை மற்றவர்கள் பார்க்கும் பார்வையே வேறாக உள்ளது. அதனை மாற்ற வேண்டும் என, அறிமுக நிகழ்ச்சியில் கூட ஆவேசமாக பேசினார்.

namitha marimuthu

மேலும் தங்களை போன்றவர்களை பெற்றோர் வெறுத்து ஒதுக்காமல் அரவணைத்தால் அவர்கள் வாழ்க்கையே மாறும் என்பதற்கு உதாரணமாக தான் இங்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மாடலிங், நடிப்பு என கலக்கி வரும் இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது மட்டும் இன்றி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!