தனுஷின் ரவுடி பேபியை காப்பி அடிச்ச சிவகார்த்திகேயனின் செல்லம்மா! புகைப்படம் வெளியிட்டு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் வரும் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள 'டாக்டர்' (Doctor Movie) திரைப்படத்தில் 'செல்லம்மா செல்லம்மா' பாடலின் glimpse வீடியோ இன்று வெளியான நிலையில் இந்த பாடலில் இடம்பெற்றுள்ள சில டான்ஸ் ஸ்டெப்ஸ், ரவுடி பேபி பாடலை போலவே இருப்பதாக, நெட்டிசன்கள் புகைப்படம் வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள்.

அதிலும் சமீப காலமாக, முன்னணி நடிகர்களின் படங்களில் உள்ள பாடல்களும், இசைகளும், அதில் இடம்பெறும் நடன காட்சிகள் என அனைத்துமே இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

எந்த படத்தில் இருந்து எது வெளியானாலும், அது எந்த பாடலுடன் ஒத்து போகிறது என்பதை மிக விரைவாக கண்டுபிடித்து கலாய்க்க துவங்கி விடுகிறார்கள் ரசிகர்கள்.


அந்த வரிசையில் தான் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள, 'டாக்டர்' படத்தில் இருந்து இன்று வெளியான 'செல்லம்மா செல்லம்மா' பாடலின் நடன ஸ்டெப்ஸ் சில, ரவுடி பேபி பாடலின் டாஸ் போலவே உள்ளது என கூறி வருகிறார்கள்.

இதற்க்கு ஆதாரமாக தனுஷ் ரசிகர்கள் சில புகைப்படங்களை வெளியிட, தற்போது அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!