
Suriya Agaram Foundation New Office inauguration Function : ஒரு நடிகர், தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி அகரம் பவுண்டேஷன் மூலமாக ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். அகரம் மூலமாக நாட்டின் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி தன்னம்பிக்கை, திறமை, சமூக பொறுப்புள்ளவர்களாக மாற்றுவதற்கான வாய்ப்புகளை செய்து வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் முறையாக அகரம் பவுண்டேஷம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் குறைவான மாணவர்களுடன் தொடங்கிய நிலையில் இன்று ஏராளமானோர் படித்து பயன் பெற்று வருகின்றனர்.
அப்பா, அம்மா இல்லாதவர்கள், பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்கள், படிக்க வசதியில்லாதவர்கள், கல்லூரி படிப்பை தொடர முடியாதவர்கள் என்று எத்தனையோ மாணவ, மாணவிகளுக்கு அகரம் கல்வி அளித்து வருகிறது. இந்த நிலையில் தான் தியாகராய நகரில் புதிதாக அமைந்துள்ள அகரம் பவுண்டேஷன் அலுவலக திறப்பு விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசினார். அதில், அவர் கூறியிருப்பதாவது: 2006 ஆம் ஆண்டு ஒரு சிறிய அறையில் சின்ன விதையில் ஆரம்பிக்கப்பட்டு இன்று பெரிய ஆலமரமாக வளர்ந்திருக்கிறது.
எனக்கு அன்பு, ஆதரவும் கொடுக்கும் மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்து கொண்டிருந்தேன். அப்போது டி ஜே ஞானவேல் கேட்ட கேள்வி தான். அதாவது, இன்றும் முதல் தலைமுறை மாணவர்கள், மாணவிகள் அப்பா மற்றும் அம்மா ஆகியோரது குடும்ப வறுமை காரணமாக படிப்பு பாதியிலேயே நின்றுவிடுகிறது. 2006ல் ஒரு சிறிய 10க்கு 10 அறையில் தான் ஆரம்பித்தோம். அதன் பிறகு வசதி கொண்ட ஒரு வீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து அப்பாவின் வீட்டில் நடைபெற்றது.
இதுவரையில் 5000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்திருக்கிறார்கள். தற்போது 2000க்கும் அதிகமானோர் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில், 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் மாணவிகள் தான். 2010 ஒரு 100 மாணவ, மாணவிகளை படிக்க வைக்க ஆசைப்பட்டோம். அப்போது 10,000 விண்ணப்பங்கள் வரையில் வந்தது. இப்போது வருடத்திற்கு 700க்கும் அதிகமான மாணவ, மாணவிகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். இப்போதும் 10,000 அப்ளிகேஷன்ஸ் வரையில் வந்து கொண்டு தான் இருக்கிறது.
இன்றும் நம் சமுதாயத்தில் முதல் பட்டதாரி மாணவ, மாணவிகள் இருக்கிறார்கள். காசு இல்லை என்பதற்காக அவர்கள் படிக்காமல் இருக்கிறார்கள் என்று பேசினார். உண்மையில் படிக்க வைக்க நீங்கள் கொடுக்கும் நன்கொடையால் கட்டப்பட்ட அலுவலகம் கிடையாது. நீங்கள் எனக்கு கொடுத்த வருமானத்தின் மூலமாக கட்டப்பட்ட பில்டிங் தான் என்று பேசினார்.
நன்கொடையாக வரும் ஒவ்வொரு காசும், படிப்பு மற்றும் படிப்பு சார்ந்த செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 10000க்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்ஸ் இன்னும் அரசு பள்ளிகளிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. அகரம் இத்தனை ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்க ஒரு காரணம் தன்னார்வலர்கள் தான். இன்னும் நிறைய அன்பு தேவைப்படுகிறது. மலை மீது இருக்கும் மாணவர்களை தன்னார்வலர் மூலமாகத்தான் எங்களால் தொடர்பு கொள்ள முடிகிறது. அப்படி அவர் கொடுத்த ஒரு மாணவர் தான் இன்று டாக்டராயிருக்கிறார். இது மக்களால் மக்களுக்காக செய்யப்படும் ஒரு சேவையாக நான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா இப்போது ரெட்ரோ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரை இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.