தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான உப்பென்னா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதையடுத்து இவர் நானிக்கு ஜோடியாக ஷியாம் ஷிங்கா ராய் படத்தில் நடித்தார். இப்படத்தில் லிப்லாக் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் கீர்த்தி ஷெட்டி.
தற்போது லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள வாரியர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் கீர்த்தி ஷெட்டி. இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் இடம்பெறும் புல்லட் பாடலுக்கு அவர் ஆடிய நடனம் ரீல்ஸில் டிரெண்டிங்காக உள்ளது.
இதுதவிர பாலா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி. மீனவர்களின் பிரச்சனையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.