தமிழில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான கேடி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் தமன்னா. ஆரம்பத்தில் கிளாமர் ரோல்களை தவிர்த்து வந்த தமன்னா, பின்னர் படிப்படியாக கவர்ச்சி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இதன் பலனாக அவருக்கு அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் வாய்ப்பு கிடைத்தது.
ஒரு காலத்தில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னாவுக்கு, தற்போது கோலிவுட்டில் ஒரு படம் கூட கைவசம் இல்லை. இவர் கைவசம் தெலுங்கு படங்கள் மட்டுமே உள்ளன. அதன்படி போலா சங்கர் எனும் தெலுங்கு படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் தமன்னா. இது அஜித் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.
நடிகை தமன்னா, தமிழில் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். அதன்படி அவர் லெஜண்ட் சரவணனுடன் இணைந்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்தது பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை தமன்னா, அதில் நடனமாடி அசத்தினார்.