பீஸ்ட் ரிசல்ட் பார்த்துட்டு... நெல்சன் வேண்டாம் மாத்துங்கனு சொன்னாங்க - ஓப்பனாக பேசிய சூப்பர்ஸ்டார்

First Published | Jul 28, 2023, 10:59 PM IST

பீஸ்ட் படத்தின் ரிசல்ட் பார்த்துட்டு விநியோகஸ்தர்கள் தனக்கு போன் போட்டு நெல்சனுடன் பணியாற்ற வேண்டாம் வேறு இயக்குனரை மாற்ற சொன்னார்கள் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், ஷிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா உள்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தது ரஜினியின் பேச்சைக் கேட்க தான். வழக்கம்போல் செம்ம மாஸாக சிங்கநடை போட்டு மேடைக்கு வந்த ரஜினி, ஜெயிலர் படம் சந்தித்த பிரச்சனைகள், இதன் ஷூட்டிங்கில் நடந்த கலாட்டாக்கள் மற்றும் நெல்சனின் குறும்புத்தனம் குறித்து ஓப்பனாக பேசினார்.

அவர் பேசியதாவது: “அண்ணாத்த படத்துக்கு பின்னர் மிகப்பெரிய இடைவெளி ஆகிப்போச்சு. அதற்கு காரணம், என்னிடம் இயக்குனர்கள் சொன்ன கதை எதுவுமே திருப்தி அளிக்கல, எல்லாமே பாட்ஷா மாதிரியும், அண்ணாமலை மாதிரியும் இருந்துச்சு. நிறைய கதை கேட்டு ரிஜெக்ட் செய்ததால் ஒருகட்டத்தில் கதை கேட்பதையே நிறுத்திவிட்டேன். 

ஒருபடத்திற்கு இயக்குனர் தான் முக்கியம், தயாரிப்பாளர் அம்மா மாதிரினா, இயக்குனர் அப்பா மாதிரி. என்னுடைய கெரியரை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டுபோனது இயக்குனர்கள் தான். இதுவரை முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் அப்படி செய்தனர். தற்போது நெல்சன் என்னை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதையும் படியுங்கள்... பிரமிக்க வைத்த 'ஜெயிலர்' ஆடியோ லான்ச் போட்டோஸ்! எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் தெரியுமா?

Tap to resize

நெல்சன் தன்னிடம் கதை சொல்ல வந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட ரஜினி, அவருக்கு காலையில் 10 மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கலாம்னு சொன்னேன். உடனே கண்ணன் வந்து சார் அவரு தூங்கி லேட்டா தான் எழுந்திருப்பாரு, அதனால 11.30க்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கலாம்னு சொன்னாரு. அப்படி லேட்டா கொடுத்தும் அவர் 12 மணிக்கு தான் கதை சொல்ல வந்தாரு. வந்த உடனே என்ன வேணும்னு கேட்டேன், அதற்கு ‘நல்லதா ஒரு காபி இருந்தா சொல்லுங்க’னு சொன்னாரு.

இதையடுத்து நெல்சன் என்னிடம் கதை சொன்னார். நான் நல்லா இருக்குனு சொன்னேன். உடனே ஒரு 10 நாள் டைம் கொடுங்க பீஸ்ட் ஷூட் முடிஞ்சதும் விரிவா சொல்றேன்னு சொன்னார். சொன்னபடி 10 நாள் கழித்து வந்து கதை சொன்னார். சூப்பராக இருந்தது. இதையடுத்து புரோமோ ஷூட் எல்லாம் முடிச்சு படத்தையும் அதிகாரப்பூர்வமா அறிவிச்சிட்டோம்.

அப்புறம் தான் பீஸ்ட் ரிலீஸ் ஆனது. பீஸ்ட்டுக்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்து படம் நல்லா போகலனு தெரிஞ்சதும் விநியோகஸ்தர்களிடம் இருந்து எனக்கு நிறைய போன் வந்தது. எல்லாரும் இயக்குனரை மாத்த சொன்னாங்க. இதையடுத்து சன் டிவி டீம் உடன் ஒரு மீட்டிங் நடந்தது. அப்போது அவர்கள் சொன்னார்கள், சார் மோசமான விமர்சனங்கள் வருவது உண்மை தான் சார், ஆனால் விநியோகஸ்தர்கள் யாருக்கும் நஷ்டமில்லை. படம் பாக்ஸ் ஆபிஸ்ல நல்ல வசூல் செஞ்சிருக்குனு சொன்னாங்க. அப்புறம் தான் நெல்சன் உடனே பண்ணாலாம்னு முடிவு பண்ணோம் என பேசி உள்ளார் ரஜினி.

இதையும் படியுங்கள்... ஆர்வமாக கதையை சொல்ல சொன்ன ரஜினியிடம் அவகாசம் கேட்ட நெல்சன்! விஜய் படம் தான் காரணமா? ரஜினி கூறிய தகவல்!

Latest Videos

click me!