தமிழர்கள் நம்பிக்கையானவர்கள், நாணயமானவர்கள்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம்

Published : Nov 09, 2025, 10:42 AM IST

தமிழர்கள் புத்திசாலிகள், நம்பிக்கையானவர்கள் மற்றும் நாணயமானவர்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 2047ம் ஆண்டு இந்தியா கண்டிப்பாக வல்லரசு நாடாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

PREV
14
இளையராஜா கச்சேரியில் காணொலி வாயிலாக பேசிய ரஜினி

அமெரிக்காவில் இசைஞானி இளையராஜாவின் இசைக்கச்சேரி நடந்தது. இந்த விழாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காணொலி காட்சி வழியாக பேசினார். அப்போது பேசிய அவர், ''இந்தியாவின் மூளை, இதயம் என்று சொன்னால் அது பாம்பே தான். இந்தியாவின் அரசியல் தலைநகரம் டெல்லி. நிதித் தலைமையகம் பாம்பே. பாம்பேயில் அம்பானி, டாடா போன்றவர்களுடன் நெருங்கி பழகி, அவர்களுக்கு வீட்டுக்கு சென்று சாப்பிடும் சந்தர்ப்பம் கிடைத்தது.

24
டாடா, அம்பானி, வாஜ்பாய், மோடியுடன் பழக்கம்

அதேபோல் டெல்லியில் பிரதமர் நரசிம்ம ராவ், வாஜ்பாய் முதல் இப்போது மோடி வரை அவர்களுடன் காபி, டிபன் சாப்பிடும் அளவுக்கு எனக்கு பழக்கம் உள்ளது. இந்த அம்பானி, டாட்டா, பிரதமர், அமைச்சர்கள் ஆகியோரிடம் உள்ள பர்சனல் மேலாளர்கள், பர்சனல் ஆலோசகர்கள் எல்லாரும் பெரும்பாலும் சுமார் 70% முதல் 75% வரை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் இருப்பார்கள். 

இது டெல்லியாக இருந்தாலும் சரி, பாம்பேவாக இருந்தாலும் சரி. நான் அவர்களிடம் எப்படி தமிழ் ஆட்களை அதிகமாக வைத்துள்ளீர்கள் என்று கேட்டேன்.

34
தமிழர்கள் புத்திசாலிகள்

அதற்கு அவர்கள், ''தமிழ் ஆட்கள் புத்திசாலிகள். நல்ல உழைப்பாளிகள். நன்றி உள்ளவர்கள். நாணயமிக்கவர்கள்'' என்று சொன்னார்கள். இதுதான் தமிழகர்களின் குணம். இப்படி இருப்பதால் தான் தமிழர்கள் எங்கு சென்றாலும் சந்தோஷமாக இருப்பார்கள். 2047ம் ஆண்டு இந்தியா கண்டிப்பாக வல்லரசு நாடாகும். இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகள் இந்தியா பொருளாதாரரீதியாக ரொம்ப முன்னேறும்.

இந்தியாவுக்கு வாருங்கள்

நீங்கள் குழந்தைகளை கல்யாணம் பண்ணிக்கொடுத்த பிறகு நீங்கள் அங்கேயே (வெளிநாடுகள்) இருக்காதீர்கள். அது உங்களுக்கும் கஷ்டம், அவர்களுக்கும் கஷ்டம். இப்போதே நீங்கள் பிறந்த இடம், கிராமம் அல்லது டவுனில் வீடு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இந்தியா திரும்பி வந்து படித்த பள்ளிக்கூடம், கல்லூரிகளுக்கு சென்று பாருங்கள்.

44
வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பது எப்படி?

நீங்கள் சைட் அடித்த அந்த பெண்கள் சாரி அந்த கிழவிகள் போய் பார்த்து மீதி காலத்தை சந்தோஷமாக கழியுங்கள். நான் 50 ஆண்டுகளை கடந்தும் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு உங்கள் ஆதரவு மட்டும் தான். 

வாழ்க்கையில் தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் ஈகோவை குறைத்து adjust, adapt, accommodate ஆகியவற்றை வீட்டில் கடைபிடித்தால் சந்தோஷமாக இருக்கலாம். அலுவகலத்திலும் இதேயே கடைபிடித்தால் சந்தோஷமாக இருப்பீர்கள்.

இளையராஜா எனக்கு அதிக பாடல்கள் கொடுக்கவில்லை

இளையராஜா கமலுக்கு அதிக ஹிட் பாடல்களை கொடுத்ததுபோல் எனக்கு கொடுக்கவில்லை. எழுபதுகளில் கொடுத்தார் இப்போது இல்லை. உங்களிடம் பேசியதில் மிக்க மகிழ்ச்சில். வாழ்க தமிழ். வாழ்க அமெரிக்கா. வாழ்க இந்தியா'' என்று தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories