Others திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிஷன் உருவக்கேலி செய்யப்பட்டார். யூடியூபர் ஒருவர் கேட்ட அநாகரிகமான கேள்விக்கு அவர் பதிலடி கொடுத்த நிலையில், இந்த சம்பவத்திற்கு பாமகவின் ஸ்ரீகாந்தி இராமதாசு உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Others திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது நடிகை கௌரி கிஷன் எதிர்பாராதவிதமாக ஒரு தவறான கேள்வியை எதிர்கொண்டார். யூடியூபர் ஒருவர், படத்தின் நாயகனிடம், “நடிகையை தூக்கினீர்களே, அவருடைய எடை என்ன?” என்று கேட்டார். இந்தக் கேள்வி உருவக்கேலியாக மாறியது.
25
கௌரி கிஷன் விவகாரம்
அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு உடனடியாக நடிகை கௌரி கிஷன் பதிலளித்து, “நீங்க எப்படி இப்படிக் கேட்கலாம்? அதைத் தெரிஞ்சி என்ன செய்யப் போறீங்க? இது முழுக்க பாடி ஷேமிங்” வலுவாக பதிலடி கொடுத்தார். இந்தக் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
35
கௌரி கிஷனின் பதில்
இந்த சம்பவத்திற்குப் பிறகு, கௌரி கிஷன் ஒரு நீளமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த விவகாரம் ஒரு தனிப்பட்ட அவமதிப்பு மட்டுமல்ல. ஊடகங்களுக்கும் கலைஞர்களுக்கும் இடையே எத்தகைய மரியாதை மற்றும் பொறுப்புடன் உறவு இருக்கிறது வேண்டும் என்பதையும் சிந்திக்க வைக்கும் விஷயம்” என்று தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பல நடிகைகள், நடிகர்கள், இயக்குனர்கள், மற்றும் ரசிகர்கள் தங்களது ஆதரவை கௌரி கிஷனுக்கு அளித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி செயல் தலைவர் திருமதி. ஸ்ரீகாந்தி இராமதாசு கடுமையாக கண்டனம் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகை கௌரி கிஷனிடம் அநாகரிகமாக கேட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழகத்தின் உயர்ந்த கலாச்சாரமும் மரியாதையும் கொண்ட மண். அந்த வகையில் நடந்த இந்தச் செயல் பெண்களின் சுயமரியாதையையும் உரிமையையும் புண்படுத்துகிறது” என்று அவர் கூறியுள்ளார்.
55
நடிகை கௌரி கிஷன்
அதோடு, “சமூக ஊடகங்களில் பெண்களை குறைக்கும் விதமான பதிவுகள், வீடியோக்கள் வெளியாகும் போதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேவையான ஊடகங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள், சட்டங்கள் கொண்டு வர அரசாங்கம் முன்வர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.