அரசியலில் களத்தில் குதிக்க மிகவும் பரபரப்பாக தயாராகி வந்த ரஜினிகாந்த், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தனி கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிடுவார் என பலர் எதிர்பார்த்தனர். எனவே தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படம் தான் கடைசி படமாக இருக்க கூடும் என்றும், அரசியல் கட்சி துவங்கிய பின்னர், திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு முழுமையாக மக்கள் பணியில் ரஜினிகாந்த் ஈடுபடுவார்என்றும் கூறப்பட்டது.
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த , 'அண்ணாத்த' திரைப்படம் லாக் டவுன் பிரச்சனைக்கு பின், மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கிய போது, படக்குழுவினர் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலும், ரத்த அழுத்த மாற்றம் காரணமாக 2 நாட்கள் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் சென்னை திரும்பினார்.
இந்த உடல்நிலையுடன், அரசியலுக்கு வருவது சிறந்த முடிவாக இருக்காது என்று தீர்மானித்து திடீர் என, இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை அதிகார பூர்வ அறிக்கையாக வெளியிட்டார்.
இவரது இந்த முடிவு ரசிகர்களை உச்ச கட்ட அதிர்ச்சியடைய வைத்தது, அதே நேரத்தில்... ரசிகர்கள், ரஜினிகாந்திடம் அவரது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியபோதிலும், தன்னுடைய முடிவில் தீர்க்கமாக இருந்து விட்டார் தலைவர்.
மேலும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், நேற்று தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது.
அரசியல் வருகைக்கு தலைவர் முற்றுப்புள்ளி வைத்து விட்டதால், ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படங்களை இயக்க உள்ள இயக்குனர் குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏற்கனவே பேட்ட படத்தின் மூலம் தன்னை இயக்கிய, கார்த்தி சுப்புராஜ் கூறிய கதை பிடித்து விட்டதால் அவருக்கு மற்றொரு வாய்ப்பு கொடுத்துள்ளாராம்.
அதே போல், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல்' பட இயக்குனர் தேசிங்கு துரைசாமி கூறிய ஒன்னு லைன் பிடித்து போனதால், அவருக்கு தன்னை இயக்கம் வாய்ப்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவரில் யார் படத்தில் ரஜினிகாந்த் முதலில் நடிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஷூட்டிங் பணிகள் முடிந்து சென்னை திரும்பியுள்ள ரஜினிகாந்த், சில நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்த பின்னர், மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகும், அதன் பின்னர் கொரோனா பிரச்சனைகள் சற்று தணிந்த பின்னரே அடுத்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.