பிரபல தனியார் தொலைக்காட்சியில், பிரைம் டைமில் ஒரு சாதாரண கிராமத்து பெண்ணை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் சுந்தரி.
கருப்பாக இருப்பதால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள். தன்னை பிடிக்காத ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவரிடம் படும் அவஸ்தைகள், கலெக்டர் ஆகவேண்டும் என்கிற கனவுடன் போராடும் ஒரு பெண்ணின் தவிப்பை மிகவும் எதார்த்தமாக வெளிப்படுத்தி வருகிறார் கேப்ரில்லா.
பல்வேறு சுவாரசியம், மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் கேப்ரில்லாவின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது அவரது நிறம் தான்.
இவர் ஏற்கனவே, நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான, 'ஐரா' படத்தில் சிறிய வயது நயன்தாராவாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது, இயக்குனர் லோகேஷ் குமார் எழுதி இயக்கியுள்ள வரவிருக்கும் திரைப்படமான N4 என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
டிக்டாக் மூலம் பிரபலமானாலும், இவர் கடிதம் மூலம் மெசேஜ் சொல்லும் வீடியோக்கள் வேற லெவெலில் ரீச் ஆகியது. இதன் மூலம் இவரத்துக்கு தற்போது சமூக வலைத்தளத்தில் பல பாலோவர்ஸ் உள்ளனர்.
மேலும் சமீபத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின், மியூசிக்கில் உருவான ஆல்பம் ஒன்றிலும் கேப்ரியெல்லா இடம்பெற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்க பட்டதாக சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்திருந்தார். தனிமை படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வரும் இவர், உயிருக்கு போராடி வருவதாகவும், இதனால் சீரியல் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக, யூ டியூப் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கேப்ரில்லா, நன்றாகத்தான் உள்ளேன், உடல்நலம் தேறி வருகிறது என இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.