சிகிச்சைக்காக அமெரிக்கா சொல்கிறாரா ரஜினிகாந்த்?... திடீர் முடிவுக்கான காரணம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்.!

First Published | Dec 31, 2020, 2:49 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்னும் இரண்டு நாள்களில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இன்று (டிசம்பர் 31 ) ஆம் தேதி தன்னுடைய அரசியல் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிடுவேன் என தெரிவித்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய உடல் நிலை காரணமாக கட்சி துவங்க வில்லை என்பதை அதிகார பூர்வக்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இம்முறை கண்டிப்பாக ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பயணம் குறித்து அறிவிப்பார் என காத்திருந்த பல்லாயிர கணக்கான ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்த போதிலும், சிலர் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது முடிவை ஏற்று கொள்வதாக கூறினர்.
Tap to resize

அதே போல் சில ரசிகர்கள் ரஜினிகாந்தின் இந்த முடிவுக்கு தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில் ஷூட்டிங்கின் போது 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது. உடனடியாக அண்ணாத்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு நடிகர், நடிகைகள் அனைவரும் சென்னை திரும்பினர். இருப்பினும் ரஜினிகாந்த் ஐதராபாத்திலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து 3 நாட்களாக ரஜினிக்கு ரத்த அழுத்த மாறுபாட்டிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மூன்று நாள் சிகிச்சைக்கு பின் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் சீரான நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் மருத்துவர்கள் ஏற்கனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், இதுபோல் ரத்த அழுத்த மாறுபாடுகள் இருப்பது அவரது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என்றும், ரஜினிகாந்த் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதனை கடவுளின் எச்சரிக்கையாக கொண்டே, அரசியலில் இருந்து விளங்குவதாகவும், இதற்காக பகிரங்கமாக ரசிகர்களிடம் மன்னிப்பு கூறுவதாகவும் தன்னுடைய 3 பக்க அறிக்கையில் தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் இன்னும் இரண்டு நாட்களில் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற உள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்த பின்னர் கடுமையான மன உளைச்சலில் இருப்பதாலும், திடீர் ரத்த அழுத்த மாறுபாடு மாரணமாக அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்றதாலும், அவருக்கு முழு ஓய்வு வேண்டும் என்கிற காரணத்திற்காகவும் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது விரைவில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!