மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்... காரில் கையசையத்தபடி உற்சாகம்...!

First Published | Dec 27, 2020, 5:26 PM IST

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக சென்னை திரும்ப உள்ளார். 

ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த அண்ணாத்த பட ஷூட்டிங்கின் போது 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதை அடுத்து படக்குழுவினர் சென்னை திரும்பினர்.
இருப்பினும் ரஜினிகாந்த் ஐதராபாத்திலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.இந்நிலையில் கடந்த 25ம் தேதி திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
Tap to resize

அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களாக ரஜினிக்கு ரத்த அழுத்த மாறுபாட்டிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று ரஜினியின் உடல் நிலை குறித்த பரிசோதனை முடிவுகள் மருத்துவர்களுக்கு கிடைத்தது. அதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும், அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சற்று முன் வெளியான மருத்துவமனையில் அறிக்கையில் ரஜினிகாந்தை இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்வதாக அறிவித்தனர். மன அழுத்தத்தை தவிர்க்க குறைந்தபட்ச பணிகளை மட்டும் ரஜினி மேற்கொள்ள வேண்டும் என்றும், உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஒருவாரம் ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக சென்னை திரும்ப உள்ளார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த காரில் இருந்த படியே கையசைக்கும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதே உற்சாகத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தது அவருக்கு என்ன ஆச்சு என கவலையில் ஆழ்ந்திருந்த ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Latest Videos

click me!