யூ-டியூப்பை தட்டித்தூக்கிய “மாஸ்டர்”... 10 வருடத்தில் எந்த ஹீரோவும் படைக்காத சாதனை...!

First Published | Dec 27, 2020, 3:28 PM IST

தற்போது யூ-டியூப்பில் கடந்த 10 வருடங்களில் இல்லாத ஒரு புது சாதனையை மாஸ்டர் டீசர் படைத்துள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் முதன் முறையாக இணைந்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா பிரச்சனையால் பாதிக்கப்பட்டது.இடையில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக வதந்தி பரவியது.
Tap to resize

தற்போது அனைத்து விதமான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தரப்பு உறுதி அளித்துள்ளது. அதுமட்டுமின்றி பொங்கல் விருந்தாக படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு தீயாய் வேலை செய்து வருகிறது.
மாஸ்டர் திரைப்படத்தில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் விருந்தாக படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மாஸ்டர் திரைப்படம் தென்னிந்திய ரசிகர்களுக்காக தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் உருவான நிலையில், இந்தியில் ‘விஜய் த மாஸ்டர்’ என்ற பெயரில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.
தீபாவளி விருந்தாக “மாஸ்டர்” திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. டீசர் வெளியான சில மணி நேரங்களில் இருந்து இன்று வரை பல்வேறு சாதனை படைத்து வருகிறது. ஒரே சமயத்தில் ஜனவரி 13ம் தேதி அன்று அனைத்து மொழியிலும் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமின்றி 2020ம் ஆண்டு ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் #Master முதலிடம் பிடித்தது. தற்போது யூ-டியூப்பில் கடந்த 10 வருடங்களில் இல்லாத ஒரு புது சாதனையை மாஸ்டர் டீசர் படைத்துள்ளது.

Latest Videos

click me!