‘தளபதி’ ஸ்டைலில் ரஜினிக்கு வாழ்த்து... ஒரே ட்வீட்டில் ரசிகர்களின் உள்ளத்தை அள்ளிய மலையாள சூப்பர் ஸ்டார்...!

First Published | Dec 27, 2020, 12:34 PM IST

சூப்பர் ஸ்டார் உடல் நலம் தேறி நல்லபடியாக வீடு திரும்ப வேண்டுமென திரையுலகினர் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

கொரோனா லாக்டவுனால் நிறுத்தப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நயன்தாரா, மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடித்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பு நடந்த ராமோஜி ராவ் பிலிம் சிட்டி, நடிகர், நடிகைகள் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் என அனைத்துமே பயோ பபுளுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
இருப்பினும் அண்ணாத்த ஷூட்டிங்கில் பணியாற்றி வந்த 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து அண்ணாத்த ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டு படக்குழு சென்னை திரும்பியது.
Tap to resize

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று நெகட்டிவ் என வந்த போதும், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை திடீரென ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ரஜினிக்கு ரத்த அழுத்த மாறுபாடு இருப்பதாகவும், கொரோனா அறிகுறிகள் எதும் இன்றி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தது. மேலும் ரத்த அழுத்த மாறுபாடு சீரானதும் சூப்பர் ஸ்டார் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டது.
ரஜினிகாந்த் இன்று அல்லது நாளை மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவருடயை அண்ணன் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் உடல் நலம் தேறி நல்லபடியாக வீடு திரும்ப வேண்டுமென திரையுலகினர் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
பவன் கல்யாண், கமல் ஹாசன், சிரஞ்சீவி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து கூறியிருக்கும் செய்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
மம்முட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், விரைவில் குணமடையுங்கள் சூர்யா... அன்புடன் தேவா...” என பதிவிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்தும், தேவா என்ற பெயரில் மம்முட்டியும் நடித்திருந்தனர். அதனை நினைவு கூறும் விதமாக இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார் மம்முட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!