வட இந்தியாவில் பேமஸான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தமிழிலும் தொடங்கப்பட்டது. தமிழில் இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். முதல் சீசனிலேயே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்ததால் இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிட்டது. இந்த சீசனில் ஆரவ் டைட்டில் வின்னர் ஆனார்.