CWC-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட ‘டாப் குக்கு டூப் குக்கு’ இந்த வருடம் கிடையாதா?

Published : May 24, 2025, 10:16 AM ISTUpdated : May 24, 2025, 10:18 AM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
பிரம்மாண்டமாக தொடங்கிய 'குக் வித் கோமாளி' சீசன் 6

சின்னத்திரை ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி உள்ளது. காமெடியுடன் கூடிய சமையல் என்பதால் பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வருகின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் சீசன் 6 தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடிகைகள் பிரியா ராமன், ஷபானா, பிக் பாஸ் சீசன் 3-ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா, ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் நடுவர் லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

24
டாப் கியரில் சென்று கொண்டிருக்கும் ‘குக் வித் கோமாளி’

இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் மற்றும் நிகழ்ச்சியை தயாரித்து வந்த ‘மீடியா மேஷன்ஸ்’ நிறுவனம் விஜய் டிவியில் இருந்து வெளியேறி, சன் தொலைக்காட்சிக்கு சென்று அங்கு ‘டாப் குக்கு டூப் குக்கு’ என்கிற பெயரில் நிகழ்ச்சியை நடத்தி வந்தனர். இதனால் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. கடந்த இரண்டு சீசன்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. சீசன் 6 தொடங்கி இரண்டு எபிசோடுகள் முடிந்துள்ள நிலையில் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

34
‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சி என்ன ஆனது?

குக் வித் கோமாளியில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் கடந்த சீசனில் பங்கெடுத்த நிலையில், இந்த சீசனில் கௌஷிக் என்ற புது நடுவரையும் களமிறக்கி உள்ளனர். 'குக் வித் கோமாளி' சீசன் 6 டாப் கியரில் சென்று கொண்டிருக்கும் நிலையில் அதற்கு போட்டியாக தொடங்கப்பட்ட ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு அந்த நிகழ்ச்சி இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வியை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியை தயாரித்து வரும் மீடியா மேஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவூஃபா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

44
‘டாப் குக்கு டூப் குக்கு’ சீசன் 2 கிடையாதா? அதிகாரப்பூர்வ விளக்கம்

அவரது பேட்டியில், “டாப் குக்கு டூப் குக்கு’ முதல் சீசனே மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனால் இந்த வருடம் கண்டிப்பாக இரண்டாவது சீசன் வரும். மீடியா மேஷன்ஸ் தயாரித்து வரும் ‘நானும் ரவுடிதான்’ நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதால் அது நிறைவடைந்ததும் ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சி தொடங்கும். கடந்த வருடம் மே மாதமே நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் கொஞ்சம் தாமதமாக வரும். நாங்கள் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை. அதே நேரத்தில் போன சீசனை விடவும் இந்த சீசன் மிகவும் தரமாக வரும்” என்று கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories