ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா?... ‘அரண்மனை 3’ அப்டேட்டை கேட்டு மிரண்டு போன ரசிகர்கள்...!

Published : Jul 23, 2021, 05:19 PM IST

அரண்மனை 3 படத்தில் இடம் பெறும் இறுதி சண்டை காட்சிக்கு மட்டும் சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செட் அமைத்து படமாக்கியுள்ளார்களாம். 

PREV
15
ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா?... ‘அரண்மனை 3’ அப்டேட்டை கேட்டு மிரண்டு போன ரசிகர்கள்...!

தமிழ் சினிமாவில் ரசிக்கும் படியான நகைச்சுவை காட்சிகள் நிறைந்த கலகலப்பான படங்களை இயக்குவதற்கு பெயர் போனவர் இயக்குநர் சுந்தர் சி. இவரது காமெடி பாணியோடு, பேய் திரில்லிங்கையும் கலந்து சுந்தர் சி இயக்கிய அரண்மனை திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 

Aranmanai 3

25

அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அரண்மனை 2 படத்தை இயக்கினார். ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இரண்டு படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் சுந்தர் சி நடித்து அசத்தியிருந்தார். 

Aranmanai 3

35

நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்ட இந்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அரண்மனை 3 திரைப்படம் தயாராகி வருகிறது. சுந்தர்.சி, ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா,  யோகி பாபு உள்ளிட்டோருடன் மறைந்த காமெடி நடிகர் விவேக்கும் நடித்திருந்தார். 

Aranmanai 3

45

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் First லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்திலிருந்து சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தன. படத்தின் ஷூட்டிங் காட்சிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தேவையான இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Aranmanai 3

55

அரண்மனை 3 படத்தில் இடம் பெறும் இறுதி சண்டை காட்சிக்கு மட்டும் சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செட் அமைத்து படமாக்கியுள்ளார்களாம். அதுமட்டுமின்றி இதற்கான கிராபிக்ஸ் காட்சிகளை மட்டும் 6 மாதத்திற்கு முன்பிருந்தே படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றியதாக கூறப்படுகிறது. 

Aranmanai 3

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories