பராசக்தி படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் பெயரில்லாத ஐடிக்களின் பின்னால் ஒளிந்துகொண்டு மோசமான அவதூறு பிரச்சாரங்கள் நடப்பதாக இயக்குநர் சுதா கொங்கரா குற்றம் சாட்டி உள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படத்திற்கு எதிராக நடக்கும் வெறுப்பு பிரச்சாரம் குறித்து அப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா பதிலளித்துள்ளார். விஜய்யின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் சுதா கொங்கரா விமர்சித்துள்ளார். பெயரில்லாத ஐடிக்களின் பின்னால் ஒளிந்துகொண்டு மோசமான அவதூறு பிரச்சாரங்கள் நடப்பதாகவும், தன் படத்தை வெளியிட முடியாத ஒரு நடிகரின் ரசிகர்களிடம் இருந்துதான் இவையெல்லாம் வருவதாகவும், இதுதான் தாங்கள் சந்திக்கும் குண்டாயிசம் என்றும் சுதா கொங்கரா கூறியுள்ளார். தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் சுதா இவ்வாறு பதிலளித்தார்.
24
ஆதங்கத்தை கொட்டிய சுதா கொங்கரா
"படம் அதன் இலக்கை அடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. உங்கள் படம் தானாகப் பேசினால் மட்டும் போதாது என்று தோன்றுகிறது. பொங்கல் வார இறுதியில் அதிகமான மக்களைச் சென்றடையும் என நம்புகிறேன். பெயரில்லாத ஐடிக்களின் பின்னால் ஒளிந்துகொண்டு, மோசமான அவதூறு பிரச்சாரங்கள் நடக்கின்றன. இதை நாம் எதிர்கொள்ள வேண்டும். இது எங்கிருந்து வருகிறது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அது எங்கிருந்து வருகிறது என்று உங்களுக்குத் தெரியும். இது, தங்கள் திறமையின்மையால் படத்தை வெளியிட முடியாத ஒரு நடிகரின் ரசிகர்களிடமிருந்து வருகிறது. இதுதான் நாங்கள் எதிர்கொள்ளும் ரவுடித்தனமும் குண்டாயிசமும்," என்று சுதா கொங்கரா கூறினார்.
34
பொங்கலுக்கு ரிலீஸ் ஆன பராசக்தி
1965-ல் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னணியில் உருவாகி உள்ள படம்தான் 'பராசக்தி' என்றும், இப்படத்தில் ரவி மோகன் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். நாயகன் வேடத்தில் மட்டுமே பார்த்த ரவி மோகனின் புதிய பரிமாணமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு நடிகை ஸ்ரீலீலாவின் முதல் தமிழ்ப் படமும் 'பராசக்தி'தான். முன்னதாக சூர்யா, துல்கர் சல்மான் ஆகியோரை வைத்து 'புறநானூறு' என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட படம்தான் தற்போது பராசக்தி ஆக உருவாகி இருக்கிறது. இப்படத்தில் பசில் ஜோசப்பும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.
மறுபுறம், 'ஜன நாயகன்' படத்தின் மூலம் நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலக இருக்கிறார். இப்படத்தின் முக்கிய வேடங்களில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன், மமிதா பைஜு ஆகியோர் நடிக்கின்றனர். வெங்கட் கே. நாராயணா, கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில் 'ஜன நாயகன்' படத்தை தயாரிக்கிறார். ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் லோஹித் என்.கே ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றி உள்ளனர். இப்படம் சென்சார் பிரச்சனையால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.