Swathi Reddy Marriage: ரகசியமாக 2-வது திருமணம் செய்த 'சுப்ரமணியபுரம்' சுவாதி: மாப்ள யார் தெரியுமா?

Published : Jul 09, 2026, 02:37 PM IST

Subramaniapuram Actress Swathi Reddy Marriage: சுப்ரமணியபுரம் பட நடிகை சுவாதி ரெட்டி, பைலட் விகாஸ் வாசுவை விவாகரத்து செய்திருந்த நிலையில், தற்போது தனது பட இயக்குநரையே கரம் பிடித்துள்ளார்.

PREV
14
Swathi Reddy Second Marriage

நடிகை சுவாதி, தனது 'மந்த் ஆஃப் மது' பட இயக்குநர் ஸ்ரீகாந்த் நாகோடியை ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழில் 'சுப்ரமணியபுரம்' படம் மூலம் பிரபலமானவர் சுவாதி. இவர் தனது திருமணப் படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து, "திருமணமாகிவிட்டது" என ஒரே வார்த்தையில் பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட் வைரலாகியுள்ளது.

24
விவாகரத்துக்கு பின் மலர்ந்த காதல்

2023-ல் வெளியான 'மந்த் ஆஃப் மது' படம் மூலம் சுவாதி மீண்டும் நடிக்க வந்தார். இதன் இயக்குநர் ஸ்ரீகாந்த் நாகோடி. இப்படத்தில் பணியாற்றியபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. முன்னதாக சுவாதி, 2018-ல் மலையாள பைலட் விகாஸ் வாசு என்பவரைத் திருமணம் செய்தார். ஆனால், 2022-ல் அவரை விவாகரத்து செய்தார். தனது சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து கணவரின் படங்களை நீக்கியபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

34
தமிழில் சுவாதிக்கு கிடைத்த பாராட்டு

சுவாதி, தெலுங்கில் 'டேஞ்சர்' படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆனால், 'ஆடவாரி மாடலகு அர்த்தாலே வேருலே' படத்தில் த்ரிஷாவின் தங்கையாக நடித்து பெரும் புகழ் பெற்றார். தெலுங்கு மட்டுமல்லாமல், தமிழிலும் சுவாதி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். குறிப்பாக, 'சுப்ரமணியபுரம்' படத்தில் இவரது இயல்பான நடிப்புக்கு பெரும் பாராட்டு கிடைத்தது. நடிப்பால் மட்டுமல்லாமல், தனது எளிமையான குணத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தார்.

44
மீண்டும் நடிக்க வருவாரா?

நடிகை சுவாதி ரெட்டி தமிழில் சுப்ரமணியபுரம் மட்டுமின்றி, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி போன்ற படங்களிலும் நாயகியாக நடித்திருந்தார். இவர் முதல் திருமணத்துக்கு பின் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். இருப்பினும் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்ததால், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மட்டும் நடிக்கத் தொடங்கினார். தற்போது இயக்குநரையே அவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளதால், அவர் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories