ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வாரணாசி திரைப்படத்தின் ரன்னிங் டைம் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.
பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் 'வாரணாசி' படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படம் 2027 ஏப்ரல் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவலை இயக்குநர் ராஜமௌலி வெளியிட்டுள்ளார். ஒரு நேர்காணலில், படத்தின் நீளம் சுமார் மூன்று மணி நேரம் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
24
3 மணிநேர ரன்னிங் டைம் ஏன்?
"பார்வையாளர்கள் கதாபாத்திரங்களுடனோ அல்லது படத்தின் உலகத்துடனோ ஒன்றவில்லை என்றால், அவர்கள் 3 நிமிடங்கள் கூட பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு யூடியூப் வீடியோக்கள் போன்ற பல தேர்வுகள் உள்ளன," என்று ராஜமௌலி சுட்டிக்காட்டினார். "ரன்னிங் டைம் ஒரு பிரச்சனையல்ல, அவர்களை அந்த உலகத்திற்குள் கொண்டு செல்வதுதான் முக்கியம். ஒரு இயக்குநராக அதை உங்களால் செய்ய முடிந்தால், ரன்னிங் டைம் ஒரு பெரிய பிரச்சனையாக நான் கருதவில்லை," என்றார்.
34
வாரணாசி பட அப்டேட்
மேலும், தனது 'ஆர்ஆர்ஆர்' படம் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நீளம் கொண்டது என்பதையும் அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் வெளியான 'துரந்தர்' படமும் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நீளம் கொண்டிருந்தது. இப்படத்தில் மகேஷ் பாபு 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தை ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் பேனர்களின் கீழ் கே.எல். நாராயணா மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா ஆகியோர் தயாரிக்கின்றனர். கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படம் ஐமேக்ஸில் தயாராவதால், திரையரங்குகளில் ஒரு அற்புதமான காட்சி அனுபவத்தை வழங்கும் என்பது உறுதி. 'பாகுபலி' மற்றும் 'ஆர்ஆர்ஆர்' படங்களை உருவாக்கிய ராஜமௌலியின் பிரம்மாண்டத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் படமாக 'வாரணாசி' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் பல்வேறு ஆச்சர்யங்களும் அடங்கி இருக்கின்றன. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஒடிசாவில் நடத்தப்பட்டது. பின்னர் கென்யா சென்ற படக்குழு, அங்குள்ள வனப்பகுதியில் படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.