புதிய காதலனுடன் ஸ்ருதிஹாசன்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

First Published | Feb 23, 2021, 10:57 AM IST

நடிகை ஸ்ருதிஹாசன் புதிய காதலருடன் பிறந்தநாள் அன்று, நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து தற்போது , இருவரும் ஸ்டுடியோவில் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் தன்னுடைய 35வது பிறந்தநாளை புதிய காதலருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
ஸ்ருதி ஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார். இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019ம் ஆண்டு பிரிந்தனர். அப்போது வேறு வேறு நாட்டில் இருப்பதால் எங்களால் காதலை தொடர முடியவில்லை என மைக்கேல் விளக்கமளித்திருந்தார்.
Tap to resize

தற்போது ஸ்ருதி ஹாசன் சாந்தனு என்பவரை காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக ஸ்ருதியும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசனை இறுக்கி அணைத்தபடி இருக்கும் போட்டோவை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார் சாந்தனு. இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து இவர் தான் ஸ்ருதியின் புதிய காதலர் என்பது தெரியவந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த சாந்தனு ஒரு டூடுல் கலைஞர் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர் சாந்தனு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் மும்பையில் ஒன்றாக கைகோர்ந்த படி நடந்து செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது
இதை தொடர்ந்து வெளியான பிறந்தநாள் கொண்டாட புகைப்படங்களும் செம்ம வைரலாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது.
தற்போது, இவர்கள் இருவரும் மும்பையில் உள்ள ஸ்டுடியோவில் இசை பணிகளை மேற்கொள்ளும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!