டாப் இந்தி நடிகர்களின் படங்களெல்லாம் பிளாப்... தென்னிந்திய படங்களின் ஆதிக்கத்தால் ஆட்டம் கண்ட பாலிவுட்

First Published Jul 6, 2022, 2:39 PM IST

box office : வட இந்தியாவில் ரசிகர்களின் ரசனை மாறிவிட்டதால் என்னசெய்வதென்று தெரியாமல் பாலிவுட் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் திண்டாடி வருகின்றனர். 

பாலிவுட் திரையுலகத்திற்கு இந்த ஆண்டின் முதல் பாதி மிகவும் மோசமானதாகவே அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆறு மாதத்தில் அங்கு ரிலீசான படங்களில் பெரும்பாலானவை படுதோல்வியை சந்தித்தன. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது தென்னிந்திய திரைப்படங்கள் தான். ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் முதல் கமலின் விக்ரம் வரை தென்னிந்திய படங்கள் இந்தியில் சக்கைபோடு போட்டன.

பாலிவுட்டில் இந்த ஆண்டு கவனிக்கத்தக்க வெற்றியை பெற்றது என்றால் அது காஷ்மீர் பைல்ஸ் மற்றும் பூல் புலையா ஆகிய படங்கள் தான். இதில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.242 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தன. இதற்கு அடுத்தபடியாக பூல் புலையா படம் ரூ.184 கோடிகளை குவித்தது. 

இதையும் படியுங்கள்... வேஷ்டி கட்டி... காலில் மெட்டி போட்டு எடக்கு மடக்கு காஸ்டியூமில் கவர்ச்சி ரகளை செய்யும் மாளவிகா மோகனன்!

இந்த ஆண்டு இந்தியில் வெளியான படங்களில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்றால் அது யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தான். கன்னட படமான இது கன்னட பதிப்பை விட இந்தி பதிப்பில் தான் அதிகம் வசூல் செய்திருந்தது. இப்படத்தின் இந்தி பதிப்பு மட்டும் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து பாலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தியது.

இதையும் படியுங்கள்... சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா... எப்போ தெரியுமா?

இதற்கு அடுத்தபடியாக ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இந்தி பதிப்பு ரூ.274 கோடிக்கு மேல் வசூலித்தது. இவ்வாறு தென்னிந்திய படங்களின் ஆதிக்கத்தால் பாலிவுட் படங்களுக்கான மவுசும் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான கங்கனா ரணாவத், அக்‌ஷய் குமார் ஆகியோரின் படங்கள் படு தோல்வியை சந்தித்தன.

இதையும் படியுங்கள்... முதலில் கஜினி பட வாய்ப்பு எனக்கு தான் வந்தது... நடிக்க மறுத்தது ஏன்? - பலவருட சீக்ரெட்... ஓப்பனாக சொன்ன மாதவன்

குறிப்பாக கங்கனா நடிப்பில் வெளியான தக்கட் திரைப்படம் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான பச்சன் பாண்டே மற்றும் பிரித்விராஜ் ஆகிய படங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. இதில் தக்கட் மற்றும் பிரித்விராஜ் ஆகிய படங்கள் ரூ,100 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்தன. இதில் பிரித்விராஜ் படம் கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்கு போட்டியாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

வட இந்தியாவில் ரசிகர்களின் ரசனை மாறிவிட்டதால் என்னசெய்வதென்று தெரியாமல் பாலிவுட் இயக்குனர்கள் திண்டாடி வருகின்றனர். அங்கு அடுத்ததாக பிரம்மாஸ்திரம் என்கிற பிரம்மாண்ட படம் வர உள்ளது. இந்த படத்தை தான் பாலிவுட்டே மலைபோல் நம்பி உள்ளது. அவர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

click me!