விஜய் டிவியில் இருந்து வெளியேறும் Priyanka Deshpande?
விஜய் டிவியை பெரும் தொகை கொடுத்து கலர்ஸ் டிவி வாங்கி உள்ளதாம். இதனால் அதில் அதிரடியாக சில மாற்றங்களை செய்யவும் கலர்ஸ் டிவி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோக்கள் அரைத்த மாவையே அரைத்து வருவதால், அதற்கெல்லாம் மூடுவிழா நடத்திவிட்டு, புத்தம் புது ரியாலிட்டி ஷோக்களை களமிறக்க திட்டமிட்டு உள்ளதாம். அதேபோல் பழைய தொகுப்பாளர்களான பிரியங்கா தேஷ்பாண்டே, மாகாபா மற்றும் கோபிநாத் ஆகியோர் நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாம்.