
மும்பை குடியிருப்பில் நடந்த அசம்பாவிதம்
மும்பையில் மனைவி கரீனாவுடன், சைஃப் அலி கான், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், மர்ம நபரால் கத்தியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
கத்தாரில் புதிய வீடு:
இந்த சம்பவத்திற்கு பின்னர் சைஃப் அலி கான், புதிய வீடு ஒன்றை வாங்கியது மட்டும் இன்றி , அதைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சைஃப் அலி கான் கத்தாரில் வாங்கியுள்ள புதிய வீடு குறித்த தகவல் தற்போது பாலிவுட் திரையுலகின் ஹாட் டாப்பிக்காகவும் மாறியுள்ளது.
50,000 கோடி சொத்துக்கு அதிபதி – ராஜ வாழ்க்கை வாழும் அரச குடும்பத்து வாரிசு!
புதிய வீடு குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்:
சமீபத்தில் அல்ஃபர்டன் குழுமம் ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சைஃப் பேசினார். கத்தாரில் உள்ள தன்னுடைய புதிய வீடு குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். கத்தார் நாட்டை பற்றி பேசும் போது, அங்கு மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தது மட்டுமல்லாமல், வீட்டிலிருந்து விலகி மற்றொரு வீட்டில் இருப்பது போல் உணர்ந்ததாகவும் கூறினார்.
கத்தாரில் சைஃப் அலி கான் புதிய வீட்டை எங்கே வாங்கினார்?
சைஃப் அலி கான் சமீபத்தில் வாங்கிய புதிய வீடு கத்தாரின் தோஹாவில் உள்ள செயிண்ட் மார்சா அரேபியா தீவு, தி பேர்ல் இல் அமைந்துள்ளது என கூறப்படுகிறது.
கத்தி குத்து சம்பவம்; பல சந்தேகங்களை எழுப்பிய சைஃப் அலிகானின் வாக்கு மூலம்!
சைஃப் அலி கானின் புதிய வீட்டில் வசிக்கும் அனுபவம்:
புதிய வீட்டில் வசிக்கும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சைஃப் அலி கான், "விடுமுறை இல்லம் அல்லது இரண்டாவது வீட்டைப் பற்றி யோசியுங்கள். நான் யோசிக்கும் சில விஷயங்கள் அங்கு உள்ளன. ஒன்று, அது வெகு தொலைவில் இல்லை, எளிதில் அணுக முடியும். இரண்டாவதாக, மிக முக்கியமாக, இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் இங்கு வசிப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. ஒரு தீவுக்குள் மற்றொரு தீவு என்ற கருத்து மிகவும் ஆடம்பரமானது மற்றும் அழகானது, மேலும் இது வசிக்க மிகவும் அருமையான இடம். நீங்கள் இங்கு இருக்கும்போது உங்களுக்கு ஏற்படும் உணர்வு மிகவும் முக்கியமானது. நீங்கள் பார்க்கும் காட்சி, உணவு, மற்றும் வாழ்க்கை முறை போன்ற விஷயங்கள்தான் இந்த முடிவை எடுக்க வழிவகுத்தன. என கூறியுள்ளார்."
உலகம் முழுவதும் சைஃப் அலி கானுக்கு பல சொத்துக்கள் உள்ளன:
உலகம் முழுவதும் சைஃப் அலி கானுக்கு பல சொத்துக்கள் உள்ளன. அவர் வசிக்கும் மும்பையின் பந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அவருடையது. ஹரியானாவின் பட்டோடியில் அவருக்கு பட்டோடி அரண்மனை உள்ளது. லண்டன் மற்றும் கஸ்டாட்டிலும் சையஃப் அலி கானுக்கு வீடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.