Rajamouli Acted as Hero in This Movie : ராஜமௌலி உதவி இயக்குநராகத் தொடங்கி, பின்னர் படிப்படியாக தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறி தற்போது பான் இந்தியா இயக்குநராக உயர்ந்துள்ளார். `RRR` மூலம் ஆஸ்கார் விருதைப் பெற்று இந்தியாவின் ஆஸ்கார் கனவை நனவாக்கினார். பான் இந்தியா படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ராஜமெளலி தான். உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு படங்களை எடுத்து இந்திய சினிமாவை உலக அரங்கில் மிளிரச் செய்தார். இந்த வரிசையில் ராஜமௌலியைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியே வந்துள்ளது.
24
Rajamouli
ஹீரோவாக நடித்த Rajamouli
ராஜமெளலி ஒரு நல்ல நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். ராஜமௌலி அவ்வப்போது தனது படங்களில் கெஸ்ட் ரோல்களில் தோன்றுவார்.ஆனால் அவர் ஹீரோவாக நடித்துள்ளார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா... அது தான் நிஜம். அவரை முன்னணி வேடத்தில் நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்கி உள்ளனர். ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. அப்படம் டிராப் ஆனதற்கு ராஜமெளலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் காரணமாம்.
ராஜமௌலி சிறுவயதில் ஹீரோவாக நடித்தார். சிறுவனாக இருக்கும்போது அவரை முதன்மை கதாபாத்திரமாக வைத்து `பிள்ளான க்ரோவி` என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. இப்படத்தை கீரவாணியின் தந்தை சிவ சக்தி தத்தா இயக்கினார். விஜயேந்திர பிரசாத் தயாரித்தார். இதில் ராஜமௌலி பாலகிருஷ்ணராக முன்னணி வேடத்தில் நடித்தார். ராஜமௌலியின் சகோதரி எம்.எம். ஸ்ரீலேகாவும் இப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஜே.வி. சோமயாஜுலு, நிர்மலம்மா போன்றோர் நடித்தனர். தொழில்நுட்பக் குழு முழுவதும் ராஜமௌலி குடும்பத்தினரே பணியாற்றினர். கீரவாணி இசையமைத்தார்.
44
Rajamouli Movie Dropped
Rajamouli ஹீரோவாக நடித்த படம் டிராப் ஆனது ஏன்?
ஒரு பிராமணக் குடும்பத்தின் பின்னணியில் இந்த `பிள்ளான க்ரோவி` படத்தை சிவ சக்தி தத்தா இயக்கினார். படத்தை குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்க நினைத்தார்கள். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு நினைத்த பட்ஜெட்டுக்குள் படத்தை முடிக்க முடியவில்லை. செலவும் அதிகரித்தது. மேற்கொண்டு பணம் போடும் அளவுக்கு வசதி இல்லை. இதனால் சிறிது காலம் படத்தை நிறுத்தி வைத்தார்கள். இதற்கிடையில் ராஜமௌலி மற்றும் படத்தில் நடித்த மற்ற குழந்தை நட்சத்திரங்களும் வளர்ந்துவிட்டனர். அதேபோல் அதில் நடித்த சீனியர்களில் சிலர் இறந்துவிட்டனர். இதனால் செய்வதறியாது இந்தப் படத்தை டிராப் செய்துவிட்டார்கள்.