தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது ஜவான் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக காலடிஎடுத்து வைக்க உள்ளார் நயன். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படத்தை தமிழில் தெறி, மெர்சல், பிகில் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய அட்லீ தான் இயக்கி வருகிறார்.
24
ஜவான் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தை வருகிற ஜூன் மாதம் 2-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக கடந்தாண்டே அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் ஷூட்டிங் இன்னும் முடியாததால், இப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகாது என்றும் இப்படத்தின் ரிலீஸை வருகிற அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஜவான் படம் குறித்த மற்றுமொரு ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ஜவான் படத்தில் நடிகை நயன்தாரா பிகினி உடையணிந்து நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. பதான் படத்தில் தீபிகா படுகோனே பிகினியில் வந்து போல் ஜவான் படத்திலும் ஒரு காட்சி உள்ளதாகவும், அந்த காட்சியில் நடிகை நயன்தாரா பிகினி உடையணிந்து நடித்துள்ளதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
44
நடிகை நயன்தாரா இதற்கு முன்னர் அஜித்தின் பில்லா, விஜய்யின் வில்லு போன்ற படங்களில் பிகினி உடையணிந்து நடித்திருந்தார். ஆனால் சமீப காலமாக அவர் கவர்ச்சியாக நடிக்காமல் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி அவருக்கு திருமணமாகி, குழந்தைகள் வேற இருப்பதால், இந்த சமயத்தில் பிகினி உடையணிந்து நடிப்பாரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது படம் ரிலீஸ் ஆனால் தான் தெரியவரும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.