Image credit: PTI
தமிழ் சினிமாவில் கடந்த ஓரிரு நாட்களாகவே ரவுண்டடித்து வரும் செய்திகளில் ஒன்று, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் தலைவரின் கடைசி படத்தை இயக்குகிறார் என்பது. பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... இயக்குனர் ஒருவரின் படத்தை புகழ்ந்து பாராட்டினால் கூட, ரஜினி தன்னுடைய அடுத்த படத்தை அந்த இயக்குனர் இயக்கத்தில் தான் நடிக்க போகிறார் என செய்திகள் கிளம்பிவிடுவது வழக்கம்.
இந்த படம் குறித்த தகவல் வெளியே கசிந்துவிடாமல் மெயின்டெய்ன் செய்ய முக்கிய காரணம் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் லியோ திரைப்படம் தான். ஆம், விஜய்க்கு கோலிவுட் திரையுலக ரசிகர்கள் மத்தியில் செம்ம மாஸ் இருந்தாலும், ரஜினிக்கு இந்தியாவை தாண்டி வரவேற்பு உள்ளது. ரஜினி - லோகேஷ் படம் பற்றிய தகவல் வெளியானால் லியோ படம் குறித்த எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்பதால் தான், ரஜினி மற்றும் லோகேஷ் தரப்பில் இருந்து இப்படம் குறித்து மூச்சு கூட விடவில்லை என கோடம்பாக்கம் ஏரியாவில் பேச்சு அடிபட்டு வருகிறது.
இந்த படத்தின் கதை குறித்து வெளியாகியுள்ள தகவலில், விக்ரம் படம் இயக்குவதற்கு முன்பாகவே ரஜினிக்கு என்று, லோகேஷ் ஒரு மாஸ் கதை நிறை தயார் செய்து வைத்திருந்தகாகவும், இந்த படத்தில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டால் கமல்ஹாசனே இப்படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்தார். மேலும் இப்படம் குறித்து லோகேஷை அழைத்து சென்று, கமல் ரஜினியை சந்தித்த நிலையில் அப்போது ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் ரஜினி நடிக்க வில்லை.
ஆனால் அந்த கதையை விட மனமில்லாமல், மீண்டும் அதே கதையை தூசு தட்ட சொல்லி ரஜினி இந்த படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். அதே நேரம், இது தான் ரஜினிகாந்தின் கடைசி படம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பல முறை இது போன்ற தகவல் வெளியானாலும், ரஜினி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவதையும் நாம் பார்த்து தான் வருகிறோம்.