ஏ.எல்.விஜய் இயக்கிய வனமகன் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சாயிஷா. இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த அவர், அடுத்ததடுத்து விஜய் சேதுபதி உடன் ஜுங்கா, சூர்யா ஜோடியாக காப்பான் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சி கொடுத்தார்.
நடிகை சாயிஷா, நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆர்யாவும், சாயிஷாவும், கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அப்படத்தில் நடித்தபோது தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆரியானா என பெயரிட்டு உள்ளனர்.
இதையும் படியுங்கள்... Love Today Remake: இந்தியிலும் கொடி கட்டி பறக்க தயாரான லவ் டுடே: யார் யார் நடிக்கிறாங்க தெரியுமா?
நடிகை சாயிஷா, குழந்தை பிறந்த பின்னர் சினிமாவில் ஹீரோயினாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல படத்தில் கவர்ச்சி பொங்க ஐட்டம் டான்ஸ் ஆடி அதிர்ச்சி கொடுத்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு பத்து தல படத்தில் இடம்பெறும் ராவடி என்கிற பாடலுக்கு சாயிஷா கவர்ச்சி நடனம் ஆடியுள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போயினர்.