Soubin Shahir Buy a New BMW XM Car : கூலி படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கு நிலையில் படத்தில் நடித்த மலையாள நடிகர் சௌபின் ஷாகீர் புதிதாக பிஎம்டபியூ கார் ஒன்றை வாங்கி அசத்தியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் தான் கூலி. முழுக்க முழுக்க ரஜினிக்காக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடி இல்லை என்பது சற்று வருத்தம் தான். இருந்த போதிலும் இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, ஆமீர் கான், சௌபின் ஷாகீர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், பூஜா ஹெக்டே என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.
24
கார் வாங்கிய சௌபின் ஷாகீர்
இதில், ரஜினிகாந்திற்கு பிறகு அதிகம் பேசப்பட்டது மலையாள நடிகரான சௌபின் ஷாகீரது நடிப்பு மற்றும் டான்ஸைப் பற்றி தான். ஒரு சில காட்சிகளில் மட்டும் வரும் நாகர்ஜூனாவிற்கு பதிலாக சௌபின் ஷாகிரை வில்லனாக நடிக்க வைத்திருக்கலாம். அந்தளவிற்கு படம் முழுவதும் சௌபின் ஷாகிர் டிராவல் பண்ணியிருப்பார். மேலும், தனக்கு கொடுத்த நடிப்பு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் என்று தனி முத்திரை பதித்துள்ளார்.
34
BMW XM என்ற சொகுசு காரை ரூ.3.30 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார்
இந்த நிலையில் தான் கூலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சௌபின் ஷாகீர் புதிதாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். கூலியில் ரைஸிங் ஸ்டாராக உதயமான சௌபின் ஷாகீர் BMW XM என்ற சொகுசு காரை ரூ.3.30 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார். ஆடம்பரத்தின் மீது ஆர்வம் கொண்ட சௌபின் சமீபகாலமாக அற்புதமான கார் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
44
பிராண்ட் நியூ மினி கார்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, பிராண்ட் நியூ மினி கார் ஒன்றை வாங்கியிருந்தார். ஆம், மினி நிறுவனத்தின் கூப்பர் எஸ் ஜே சி டபிள்யூ காரை வாங்கியிருந்தார். இந்த காரை வாங்கும் போது தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் சென்றிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.