Thangamayil not Pregnant in Pandian Stores 2 :பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கர்ப்பமாக இருக்கும் தங்கமயில் டாக்டரிடம் செக்கப் சென்ற நிலையில் இந்த வாரம் என்ன நடக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்
Thangamayil not Pregnant in Pandian Stores 2 : விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் கடந்த வாரம் ராஜீயை அவரது அப்பா மற்றும் அம்மா இருவரும் தங்களது வீட்டிற்கு அழைத்தும் அவர் செல்ல மறுத்துள்ளார். இதே போன்று ஜாமீனில் வெளிவந்த குமரவேலுவிற்கு எதிராக அரசி சாட்சி சொல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதன் பின்னர் வாரத்தின் கடைசியாக தங்கமயிலுக்கு புடவை எடுத்துக் கொடுத்த சரவணன் மனைவி மாசமாக இருக்கிறதை குடும்பத்தோடு சேர்ந்து கேக் வெட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதையடுத்து தங்கமயிலுவை டாக்டரிடம் செக்கப்பிற்கு அழைத்து சென்றிருந்தனர். அதோடு கடந்த வாரம் எபிசோடுகள் முடிந்தது.
25
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஆகஸ்ட் 18 முதல் 23 வரை எபிசோடு புரோமோ
இனி இந்த வாரம் ஆகஸ்ட் 18 முதல் 24ஆம் தேதி வரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம். மனைவி மாசமாக இருக்கிறார் என்பது தெரிந்து தனக்கு குழந்தை பிறக்க போகிறது என்று மகிழ்ச்சியாக இருக்கிறார். மேலும், மனைவிக்கு பிடித்த எல்லாவற்றையும் செய்கிறார். அதே போன்று தான் பாண்டியனின் குடும்பமும், தங்கமயிலுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறார்கள். இந்த நிலையில் தான் வெறும் Pregnancy Kitஐ வைத்து செக்கப் செய்த தங்கமயில் தனது அம்மா சொன்ன மருத்துவரிடம் குடும்பத்தோடு Check Up சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் Pregnancy Kit பொய் என்றும், நீங்கள் இப்போது மாசமாக இல்லை என்றும் கூறிவிட்டார்.
35
சரவணனுக்கு ஷாக் கொடுத்த டாக்டர்
இது தங்கமயிலுக்கு மற்றும் சரவணனுக்கு அதிர்ச்சி கொடுக்க கோமதியும் இதைக் கேட்டு ஷாக்கிவிட்டார். ஏற்கனவே தங்கமயில் வெறும் 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார், ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டு ஆபிஸில் வேலை பார்க்கிறேன் என்றும் எம் ஏ இங்கிலிஸ் படித்திருக்கிறேன் என்றும் அடுக்கடுக்கா பொய் சொல்லி ஏமாற்றி வைத்திருந்தார்.
இந்த உண்மை தெரிந்த சரவணன் தங்கமயிலுவிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். அதோடு அவரை அவரது வீட்டிலும் விட்டுவிட்டு வந்தார். இப்படி அடுக்கடுக்காக பொய் சொன்ன தங்கமயில் குழந்தை பிறக்க போகிறது என்று பிரக்னன்ஸி டெஸ்ட் வச்சு செக்கப் செஞ்சு அதில் 2 கோடு இருப்பதைக் கண்டு தனக்கு குழந்தை பிறக்க போகிறது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு அம்மாவின் உதவியோடு மீண்டும் தனது கணவரது வீட்டிற்கு வந்தார்.
45
தங்கமயில் கர்ப்பம் இல்லையா?
அதன் பிறகு தங்கமயிலை எல்லோரும் தாங்கு தாங்கு என்று தாங்கினார்கள். அவரை ஒரு வேலையும் செய்யவிடாமல் பாதுகாத்தார்கள். இந்த நிலையில் தான் இப்போது அவர் கர்ப்பம் இல்லை என்று டாக்டர் கூறவே, கர்ப்பமாக இருப்பதாக சொல்லி தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி தங்கமயிலுவிடம் பேசுவதை சரவணன் தவிர்க்கிறார். மேலும், இருவருக்கும் இடையில் பெரிய விரிசல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அது பிரிவாக ஏற்படுமோ என்று அஞ்சப்படுகிறது. அதன் பிறகு இருவருக்கும் இடையிலும் சரி, பாண்டியன் குடும்பத்திலும் சரி என்ன நடக்கிறது என்பது தான் இந்த வாரத்திற்கான எபிசோடுகள்.
55
அரசி கோர்ட் சீன் மற்றும் கதிரின் டிராவல்ஸ் கனவு
அதே போன்று கோர்ட்டுக்கு சென்று வரும் அரசிக்கு ஒரு கட்டத்தில் குமரவேல் மீதான காதல் காட்சிகள் பற்றி கேள்விகள் கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குமரவேலுவிற்கு தண்டனை கிடைக்குமா அல்லது விடுதலை கிடைக்குமா என்பதை பொறுத்திருத்து பார்க்கலாம். டிராவல்ஸ் வைக்க ஆசைப்படும் கதிருக்கு பாண்டியன், வங்கி லோனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தாரா, கதிரின் டிராவல்ஸ் கனவு நிறைவேறியதா என்பதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வாரத்திற்கான மொத்த எபிசோடுகள் என்று கூறப்படுகிறது.