தொடங்கியே 3 மாசம் தான் ஆகுது.. அதற்குள் இழுத்து மூடப்படும் விஜய் டிவி நடிகையின் சீரியல்

Published : Aug 16, 2025, 05:18 PM IST

விஜய் டிவி சீரியல் நடிகை நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி தொடங்கப்பட்ட சின்னத்திரை சீரியல் ஒன்று தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்துள்ளது.

PREV
14
Meenakshi Sundaram Serial End Soon

கலைஞர் டிவியில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட மீனாட்சி சுந்தரம் என்கிற சீரியல் இம்மாதம் முடிவடைய உள்ளதாம். இந்த சீரியலில் விஜய் டிவி நடிகை ஷோபனா நாயகியாக நடித்து வந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு என்கிற சீரியலில் நாயகியாக நடித்தவர். அந்த சீரியல் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பான முத்தழகு சீரியல் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. அந்த சீரியலை தொடர்ந்து நடிகை ஷோபனா நடிக்க கமிட்டான சீரியல் தான் மீனாட்சி சுந்தரம். இந்த சீரியலின் அறிவிப்பே அதகளமாக இருந்தது.

24
மீனாட்சி சுந்தரம் சீரியல்

மீனாட்சி சுந்தரம் சீரியலில் ஷோபனாவுக்கு ஜோடியாக எஸ்.வி.சேகர் நடித்திருந்தார். தன் தந்தை வயது நடிகருக்கு ஜோடியாக ஷோபனா நடிப்பது பேசு பொருள் ஆனது. இந்த சீரியலின் மீதான எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக ஷோபனாவுக்கு, எஸ்.வி.சேகர் தாலி கட்டுவது போன்ற புரோமோவை வெளியிட்டனர். இதனால் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நன்கு ரீச் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே இந்த சீரியலுக்கு படிப்படியாக நல்ல டிஆர்பி ரேட்டிங்கும் கிடைத்து வந்தது. இந்த நிலையில், திடீரென மீனாட்சி சுந்தரம் சீரியல் முடிவுக்கு வர உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

34
3 மாதத்தில் முடிவடையும் சீரியல்

சின்னத்திரை வரலாற்றில் குறுகிய காலத்தில் முடிவடையும் சீரியலாக இது இருக்கும் என தெரிகிறது. கடந்த ஏப்ரல் 28ந் தேதி தொடங்கப்பட்ட இந்த சீரியல் வருகிற ஆகஸ்ட் 23ந் தேதி உடன் நிறைவடைய உள்ளதாம். அதன் கிளைமாக்ஸ் காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சீரியல் இவ்வளவு வேகமாக முடிக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. சீரியல் குழுவினரிடையே ஏதேனும் பிரச்சனையா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் சீரியல் குழுவினர் இதுகுறித்து இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்காமல் இருந்து வருகின்றனர்.

44
ஷோபனா கைவசம் உள்ள விஜய் டிவி சீரியல்

மீனாட்சி சுந்தரம் சீரியல் நிறைவடைந்தாலும் நடிகை ஷோபனா கைவசம் விஜய் டிவி சீரியல் உள்ளது. ஷோபனா நடிப்பில் கலைஞர் டிவியில் மீனாட்சி சுந்தரம் சீரியல் தொடங்கப்பட்ட அதே நாளில், அவர் நடித்த மற்றொரு சீரியலான பூங்காற்று திரும்புமா விஜய் டிவியில் தொடங்கப்பட்டது. தற்போது அந்த சீரியலில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த சீரியலில் இஷான் ஷியாம் மற்றும் சமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த சீரியலை தாய் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த சீரியல் விஜய் டிவியில் சக்கைப்போடு போட்டு வருகின்றது.

Read more Photos on
click me!

Recommended Stories