“வேட்டி, சட்டை போட்டாலே தனி கெத்து தான்டா”... முரட்டு தாடியுடன் மிரட்டலாக போஸ் கொடுத்த நடிகர் சூரி...!

First Published | Dec 19, 2020, 11:52 AM IST

இந்த போட்டோக்களுடன் “என்னதான் t shirt-u jeans nu போட்டாலும் வேட்டி சட்ட போட்டாலே தனி கெத்துதான்டா” என ட்வீட் செய்துள்ளார். தற்போது இந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

தற்போது தமிழ் சினிமாவின் டாப் காமெடி நடிகராக வலம் வரும் சூரி, சென்னைக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த காலத்தில் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. லாரி கிளீனர், பெயிண்ட்டர் என பல வேலைகளை செய்திருக்கிறார்.
சினிமாவில் கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளை கூட பயன்படுத்தி வந்த சூரிக்கு, சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மிகப்பெரிய உச்சாணியாக அமைந்தது. ஒரே ஒரு பரோட்டா காமெடி மூலம் பரோட்டோ சூரி என ரசிகர்களால் இன்றளவும் அழைக்கப்படுகிறார்.
Tap to resize

அதேபோல, நடிகர் விமலுடன் களவாணி படத்தில் நடித்தவர், வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா,புலி வால், தேசிங்கு ராஜா, மாப்ள சிங்கம் தொடர்ச்சியாக நடித்தார். விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் படத்திலும் அசத்தலாக நடித்து வருகிறார்.
அதிலிருந்து, சிவகார்த்திகேயனின் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், சீமராஜா, நம்மவீட்டுப்பிள்ளை வரை தொடர்ச்சியாக நடித்தார். தற்போது அண்ணன் - தம்பி என அழைக்கும் அளவிற்கு இருவரும் நட்புடன் பழகி வருகின்றனர்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்திலும், வெற்றி மாறன் இயக்கத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். வெற்றிமாறன் படத்திற்காக சூரி சிக்ஸ்பேக் வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த போட்டோவும் சோசியல் மீடியாவில் வைரலானது.
கொரோனா லாக்டவுன் நேரத்தில் தனது மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து சூரி வெளியிட்ட சேட்டை வீடியோக்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது சூரி பட்டு, வேட்டை சட்டையில் இருக்கும் இரண்டு புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டோக்களுடன் “என்னதான் t shirt-u jeans nu போட்டாலும் வேட்டி சட்ட போட்டாலே தனி கெத்துதான்டா” என ட்வீட் செய்துள்ளார். தற்போது இந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!