சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற சில பிரபலங்கள் வெள்ளித்திரையில் நிலைத்த நிலையில், இவரால் வெற்றி கனியை பறிக்கமுடியவில்லை.
2006 ஆம் ஆண்டு வெளியான 'பச்சை குதிரை', படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இதை தொடர்ந்து 'சரோஜா' படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
'நவீன சரஸ்வதி சபதம்', 'லிங்கா' ஆகிய படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த ராஜ்கமல், ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் 'மேல்நாட்டு மருமகள்'.
2018 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் தற்போது வெள்ளித்திரை வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் சின்னத்திரைக்கே என்ட்ரி கொடுத்துள்ளார். கடைசியாக இவர், 2012 முதல் 2017 வரை ஒளிபரப்பான பைரவி தொடரில் தான் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'அபியும் நானும்' என்கிற சீரியலில் நடிக்க உள்ள தகவலை அவரே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.