6 SIIMA விருதுகளை தட்டி தூக்கிய 'சூரரை போற்று' திரைப்படம்!! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!!

First Published Sep 20, 2021, 2:37 PM IST

சமீபத்தில் தான் 'சூரரை போற்று' படத்திற்காக, மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் நடிகர் சூர்யா. இதை தொடர்ந்து தற்போது நடைபெற்ற SIIMA விருது விழாவில், 6 விருதுகளை தட்டி தூக்கியுள்ளது 'சூரரை போற்று' திரைப்படம்.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்த சூரரைப் போற்று திரைப்படம்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

உலக அளவில் கிடைத்த அங்கீகாரமாக ஆஸ்கர் விருதின் பொதுப்பிரிவுக்கு இந்த படம் தேர்வு செய்யப்பட்டதாக ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற 366 திரைப்படங்களின் பட்டியலிலும் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் இடம்பெற்றிருந்தது. ஆனால் இறுதிப்பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறாதது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் பிரிவில் ‘சூரரைப் போற்று’ பட இயக்குநர் சுதா கொங்கராவின் பெயரும், சிறந்த நடிகர் பிரிவில் சூர்யா பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து 26 மொழிகளில் கிட்டதட்ட 100 படங்கள் இங்கு திரைப்பட உள்ளது. இந்நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும், சிறந்த திரைப்படத்திற்கான விருது சூரரைப் போற்று படத்திற்கும் பெற்றது அனைவரும் அறிந்ததே...

இதை தொடர்ந்து தற்போது நடந்து முடிந்துள்ள SIIMA விருது விழாவில், சூரரை போற்று திரைப்படம் மொத்தம் 6 விருதுகளை தட்டி தூக்கியுள்ள தகவல் வெளியாகி படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அந்த வகையில், சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளியும் பெற்றுள்ளனர். சிறந்த படம்மாக தேர்வு செய்யப்பட்ட 'சூரரை போற்று' படத்திற்கான விருதை 2டி நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது  ஜிவி பிரகாஷ் குமாருக்கும், சிறந்த ஒளிப்பதிவாளராக நிகேத் பொம்மி, மற்றும் சிறந்த பாடகராக ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் ஆகியோரும் விருதை பெற்றுள்ளனர்.

click me!