மாடல் அழகியான ரைசா வில்சன், முதன் முதலில் தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்தவர்.
தற்போது விஷ்ணு விஷாலுடன் "எஃப்.ஐ.ஆர்"., ஜி.வி.பிரகாஷ் உடன் "காதலிக்க நேரமில்லை" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிக்க உள்ள "ஆலிஸ்" என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.
இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் அவர் நடித்து உள்ள தி சேஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ் சமீபத்தில் வெளியானது. ஹீரோயின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பதால் இதில் ரைசா லீட் ரோலில் நடித்து வருகிறார்.
சினிமா பட வாய்ப்புகளை கைப்பற்ற ஓவர் கிளாமர் போஸ்களை கொடுத்து ரைசா புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரைசா, கருப்பு நிற உடையில், உடலே மின்னும் அளவிற்கு மேக்அப் போட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அதிலும் இவர் கழுத்தில் மின்னும் டிசைன் டிசைனான... வைர நெக்லஸ் வேற லெவலுக்கு இவருடைய அழகை கூடி காம்பித்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.