நயன்தாரா - சமந்தா இருவரையும் நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதி!! வைரலாகும் போஸ்டர்!

Published : Sep 19, 2021, 05:54 PM IST

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து, நேற்று விக்னேஷ் சிவன் பிறந்தநாளை முன்னிட்டு 'two two two ' பாடல் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தில் இருந்து புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.  

PREV
15
நயன்தாரா - சமந்தா  இருவரையும் நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதி!! வைரலாகும் போஸ்டர்!

நயன் காதலர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இந்த படத்தில், 'நானும் ரௌடி' தான் படத்தை தொடர்ந்து, மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து இயக்குகிறார் விக்னேஷ் சிவன். சமந்தாவும் மற்றொரு நாயகியாக நடிக்கிறார்.

 

25

'காத்து வாக்குல ரெண்டு காதல்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முதல் கட்டமாக ஹைதராபாத்தில் துவங்கி தொடர்ந்து நடைபெற்ற நிலையில், இறுதி கட்ட படப்பிடிப்பை புதுச்சேரியில் நடத்தி முடித்தனர்.

 

35

புதுச்சேரியில் சமந்தாவும் - நயன்தாராவும் விஜய் சேதுபதியுடன் நடந்த போது, எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வைரலாக நிலையில், தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

 

45

ஏற்கனவே 'காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று வெளியான 'டூ டூ டூ ' பாடலும் அனிரூத் குரலில் வெளியாகி சக்க போடு போட்டு வருகிறது.

 

55

இந்நிலையில் நயன்தாரா மற்றும் சமந்தாவை விஜய் சேதுபதி நெஞ்சோடு அனைத்து கொண்டிருப்பது போன்ற போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

click me!

Recommended Stories