செல்வராகவன் முன்னாள் மனைவியின் வெட்டிங் பிளான்! மறைத்த ரகசியத்தை வெளியிட்ட சோனியா அகர்வால்! குவியும் வாழ்த்து!

First Published | Jul 25, 2020, 5:22 PM IST

நடிகையும் இயக்குனர் செல்வராகவனின் முன்னாள் மனைவியுமான சோனியா அகர்வால், கடந்த 3 நாட்களாக தாலிகட்டுவது, திருமண மோதிரம், என திருமணத்திற்கு சம்மந்தமான விஷயமாகவே பகிர்ந்து வந்த நிலையில், அந்த ரகசியம் என்ன என்பதை வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகையும், இயக்குனர் செல்வராகவனின் முன்னாள் மனைவியுமான சோனியா அகர்வால், தாலி காட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதால், அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போகிறாரா என்கிற கேள்வியுடன், இவருக்கு தொடர்ந்து பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் அதன் பின்னணி என்ன என்பதை வெளிப்படுத்தியுள்ளார் சோனியா அகர்வால்.
தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பின்னர், தமிழில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை சோனியா அகர்வால். முதல் படத்திலேயே இந்த படத்தின் இயக்குனர் செல்வராகவனுக்கும், சோனியா அகர்வாலுக்கு காதல் தீ பற்றியது.
Tap to resize

ஆனால் இதனை அவர்கள் உடனடியாக வெளிப்படுத்தவில்லை என்றாலும், தொடர்ந்து இருவரை சுற்றியும் சில காதல் கிசுகிசு எழுந்தவண்ணம் இருந்தது.
ஆனால் அதனை பொருட்படுத்தாத சோனியா அகர்வால், இந்த படத்தை தொடர்ந்து, 7 ஜி ரெயின்போ காலனி, மதுர, கோவில், திருட்டு பயலே என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். புதுப்பேட்டை படத்திற்கு பின், இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.
2006 ஆம் ஆண்டு செல்வராகவனை திருமணம் செய்து கொண்ட பின், சோனியா அகர்வால் திரைப்படங்கள் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் 2010 ஆம் ஆண்டு முறையாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பின்னர் இயக்குனர் செல்வராவான் 2011 ஆம் ஆண்டு, மயக்கம் என்ன படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்த்து வருகிறார். ஆனால் சோனியா அகர்வால், மீண்டும் சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க துவங்கினார்.
கடந்த 10 வருடமாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் சோனியா அகர்வால், தற்போது திடீர் என, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தாலி கட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் 3 நாட்கள் காத்திருங்கள் என்றும் கூறியுள்ளார். சோனியா அகர்வால் திடீர் என தாலி கட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளதால், அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறாரா? என்கிற சந்தேகத்திலேயே இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தொடர்ந்து 3 நாட்களும் திருமணம் சம்மந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிருத்து வந்த சோனியா அகர்வால் ஒரு வழியாக, இன்று அந்த ரகசியத்தை உடைத்து விட்டார்.
அதாவது இவர், சில நண்பர்களுடன் இணைந்து, கல்யாணத்தை பிளான் போட்டு செய்து தரும் ஈவென்ட் கம்பெனி ஒன்றை லான்ச் செய்துள்ளார். இதில் இதில் அவருக்கு உதவியாக கை கோர்த்துள்ளவர்கள் அனைவருமே, பிரபலங்கள் தான்... இவரின் இந்த கல்யாண பிளானிங் பிசினஸ் நல்லபடியாக வளர பலர் தொடர்ந்து இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!