சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ள நிலையில், அப்படத்தின் அடிபொலி அப்டேட் வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் 25-வது படம் பராசக்தி. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்திருக்கிறார். மேலும் ரவி மோகன், அதர்வா முரளி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இது அவர் இசையமைக்கும் 100-வது படமாகும்.
24
பராசக்தி கதை என்ன?
பராசக்தி திரைப்படம் மொழிப்போர் தியாகியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கதைக்களம் என்பதால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் சூர்யா. அவர் நடிக்க மறுத்ததை அடுத்து தான் சிவகார்த்திகேயன் கைவசம் இப்படம் சென்றது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 14-ந் தேதி பராசக்தி திரைப்படம் திரைக்கு வர உள்ளது.
34
ஜன நாயக்னுக்கு போட்டியாக ரிலீஸ் ஆகும் பராசக்தி
பராசக்தி திரைப்படம் விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு போட்டியாக தான் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் அப்டேட்டையும் அப்படத்திற்கு போட்டியாக வெளியிட்டு வருகிறார்கள். ஜன நாயகன் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் வருகிற டிசம்பர் 27-ந் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது. அதற்கு போட்டியாக பராசக்தி படக்குழுவும் இன்று ஒரு அப்டேட்டை வெளியிட்டு உள்ளது. அது ஆடியோ லாஞ்ச் அப்டேட்டாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அதில் ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள்.
அதன்படி பராசக்தி படக்குழு யாரும் எதிர்பாரா ஒரு அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார்கள். அது என்னவென்றால் வருகிற டிசம்பர் 18-ந் தேதி பராசக்தி திரைப்படத்தின் 10 நிமிட எக்ஸ்குளூசிவ் வீடியோவை படக்குழு வெளியிட இருக்கிறார்களாம். டிசம்பர் 18-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள விழாவில் இந்த வீடியோ வெளியிடப்பட உள்ளதாம். ஆடியோ லாஞ்ச், ப்ரீ ரிலீஸ் ஈவண்டுக்கு முன்னதாக யாரும் ஒரு எதிர்பாராத நிகழ்வாக தான் இந்த பராசக்தி ஈவண்ட் நடக்க இருக்கிறது.