தளபதி விஜய்யின் கோட்
தளபதி விஜய்யின் கோட் படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசானது. இந்தப் படத்திற்கு பிறகு அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு ஹிட் கொடுத்தது. இப்போது அதே நாளில் தான் சிவகார்த்திகேயன் தனது மதராஸீ படத்தையும் ரிலீஸ் செய்கிறார்.
சூர்யாவுக்கு கஜினி, விஜய்க்கு துப்பாக்கி என மைல்கல் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், மதராஸி, சிவகார்த்திகேயன் கெரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கூறியுள்ளார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதன்படி அப்படத்தின் வெளிநாட்டு உரிமையை பர்ஸ் பிலிம் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.