Don Release date : ராஜமவுலியுடன் மோதலை தவிர்த்த சிவகார்த்திகேயன்.... டான் படத்தின் ரிலீஸ் தேதி அதிரடி மாற்றம்

Ganesh A   | Asianet News
Published : Mar 02, 2022, 10:23 AM IST

Don Release date : சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள டான் திரைப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. 

PREV
14
Don Release date : ராஜமவுலியுடன் மோதலை தவிர்த்த சிவகார்த்திகேயன்.... டான் படத்தின் ரிலீஸ் தேதி அதிரடி மாற்றம்

அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சிபி சக்ரவர்த்தி. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ (DON) படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். பிரியங்கா மோகன் ஹீரோயினாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, குக் வித் கோமாளி ஷிவாங்கி, பால சரவணன், ஆர்.ஜே விஜய், பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

24

அனிருத் (Anirudh) இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி வருகிற மார்ச் 25-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

34

அன்றைய தினம் ராஜமவுலி (Rajamouli) இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள பிரம்மாண்ட படமான ஆர்.ஆர்.ஆர் (RRR) ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டதால் டான் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. மேலும் இந்த இரண்டு படங்களும் லைகா கைவசம் உள்ள படங்கள் என்பதால் டான் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது.

44

இந்நிலையில், டான் (DON) படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி டான் படம் வருகிற மே மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டான் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற ஒப்புக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயனுக்கு லைகா நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories