Seyon: பேச்சியம்மன், விருமாண்டி குல தெய்வமாக இருந்தால் முருகப் பெருமானை வழிபட கூடாதா? சேயோன் படத்தின் கதை இதுதானா?

Published : Feb 20, 2026, 04:52 PM ISTUpdated : Feb 20, 2026, 06:15 PM IST

Seyon Movie Story and Detailed Explanation: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'சேயோன்' படத்தின் முழு கதையையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
19
Seyon Movie Story and Detailed Explanation:

தமிழ் சினிமாவில் தற்போது டாப் டென்னில் முதலிடத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஹிட் படத்தையே கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது அவரது நடிப்பில் அடுத்து உருவாகும் `சேயோன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான `பராசக்தி' எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. சற்று மனம் உடைந்த சிவா அடுத்ததாக சேயோன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இப்படத்தின் புரோமோவை சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர்.

29
SivaKarthikeyan Upcoming movie Seyon

இயக்குனர்: தாய் கிழவி படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் ரொம்பவே ஈர்க்கப்பட்டுவிட்டார். இயக்குநர் சிவகுமார் முருகேசன் தாய் கிழவியை இயக்கியுள்ளார். சிவக்குமார் கதை சொன்னதும் சிவகார்த்திகேயனுக்கு பிடித்துவிட்டதாம். உடனடியாக நடித்துவிட முடிவு செய்து அவருக்கு தேதிகளை கொடுத்துவிட்டார். படத்துக்கு சேயோன் என்று பெயரிடப்பட்டுள்ளது. தாயாரிப்பு: சேயோன் திரைப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார்.தீ பட வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

39
SivaKarthikeyan and Kamal Haasan

கதை உருவான காரணம்: மதுரையில் உசிலம்பட்டி அருகில் கருமாத்தூர் என்னும் பகுதியில் விருமாண்டி கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலிலை குலதெய்வமாக கொண்டவர்கள் முருகனை வணங்க மாட்டார்கள் இதற்கு ஒரு பெரிய கதை உண்டு. பேச்சியம்மன் v/s பேய்காமன்: கருமாத்தூருக்கு காவல் தெய்வமாக பேய் காமன் என்பவர் இருக்கிறார். அப்பொழுது பேச்சியம்மன் இந்த ஊருக்கு வந்திருக்கிறார்.இந்த ஊரை பிடித்து விட்டது அதன் காரணமாக மக்களுக்கு இங்கேயே காவல் தெய்வமாக இருக்க விரும்புகிறார். அதனை இருக்க விடாமல் பேய்க்காமன் தடுக்கிறார். அதனால் பேச்சியம்மன் கோபம் கொண்டு பேய்காமனை அழிப்பதற்காக பேச்சியம்மன் சிவனிடம் சென்று முறையிடுவதற்கு செல்கிறார். ஆனால் சிவன் தியானத்தில் இருப்பதால் சொல்ல முடியாததால் திரும்பி வருகிறார் பேச்சியம்மன்.

49
Seyon movie first look and teaser

அண்ணனிடம் உதவி கேட்கச் சென்ற பேச்சியம்மன்: பேச்சியம்மனின் அண்ணனான விருமாண்டி மலையாள தேசத்தில் கோயில் கொண்டுள்ளார். மலையாள தேசத்தில் அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. அவரிடம் சென்று பேச்சியம்மன் நடந்ததை சொல்லி உதவி கேட்க, விருமாண்டி நான் உனக்காக அங்கு வருகிறேன். நாள் நீ எனக்கு படைகளாக கர்ப்பிணியான ஒரு பெண்ணையும் கற்பனையான ஒரு மாடும் எனக்கு தினந்தோறும் படைகளாக கொடுக்க வேண்டும் என்று விருமாண்டி சொல்கிறார். பேச்சியவனுக்கு இது நடக்காது என்று தெரிந்தும், பேய் காமனை அழிப்பதற்காக விருமாண்டியிடம் பொய் சொல்லி நீ கேட்டதை நான் தருகிறேன் என்று அழைத்துக் கொண்டு வருகிறார்.

59
Seyon Movie Story - பேய் காமன்v/s விருமாண்டி:

இங்கு வந்ததும் விருமாண்டி சென்று பேய்க்காமனிடம் சண்டை இடுகிறார். சண்டை அதிகரித்துக் கொண்டே இருக்கும் பொழுது விருமாண்டி பேய் காம்பனின் குதிரையை ஒரு காலை உடைத்து விடுகிறார். சண்டை உச்சபட்சத்திற்கு போகும்போது மதுரை தாங்காது என்று சொக்கன் மீனாட்சி மற்றும் முருகன் ஆகியோரும் சண்டையை தீர்த்து வைப்பதற்காக வருகின்றனர். பேச்சுவார்த்தையின் மூலம் இந்த சண்டையை தீர்த்து வைக்கலாம் என்று முடிவுக்கு வருகிறது அதில் தலைமையாக முருகன் இருக்கிறார். பேய் காமனுக்கும், விருமாண்டிக்கும் ஒரு பந்தயம் வைக்கிறார்கள். கருமாத்தூரில் இருந்து மீனாட்சி அம்மனின் கோபுரத்தை தொட வேண்டும் என்று முருகன் சொல்லிவிடுகிறார். அப்பொழுது பேய்க்காமனின் குதிரையின் காலை விருமாண்டி உடைத்து விட்டதால் பேய்க்காமலின் குதிரையை விருமாண்டி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முருகன் குதிரையை மாற்றி விடுகிறார்.

69
பேச்சியம்மனின் சாபம்:

அப்பொழுது விருமாண்டி பந்தயத்தில் தோற்றுப் போக முருகனால் தான் நாங்கள் தோற்றுப் போனோம் என்று பேச்சியம்மன் சொல்லி விடுகிறார். ஆகையால் முருகனை இனிமேல் விருமாண்டி குல தெய்வம் இருப்பவர்கள் கும்பிடக் கூடாது என்று பேச்சியம்மன் சொல்லிவிடுகிறார். அதையும் மீறி முருகன் கோயிலுக்கு சென்றால் அவர்கள் குடும்பமே அழிந்து விடும் என்று சாபமிட்டு செல்கிறார்.

79
Sivakarthikeyan Next Movie

விருமாண்டியை கிணத்துக்குள் அடக்கி வைத்த பேச்சியம்மன்: விருமாண்டியை ஊருக்கு கூட்டிட்டு வந்து சண்டையிட்டு முடிந்த பிறகு விருமாண்டி கேட்டதை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை வந்த பொழுது செய்வது அறியாத பேச்சியம்மன் தனது மோதிரத்தை கழட்டி ஒரு கிணத்துக்குள் போடுகிறார். அண்ணா மோதிரம் அந்த கிணத்துக்குள் விழுந்திருச்சு அதை எடுத்துக் கொடு என்று பேச்சியம்மன் சொல்ல விருமாண்டி அந்த கிணத்திற்குள் குதிக்கிறார். அந்த கிணறை ஒரு சங்கிலியால் கட்டி ஒரு கல்லை வைத்து மூடி விடுகிறார்.

89
Seyon Movie

என்னம்மா நான் உனக்காக இந்த கிணத்துக்குள்ள குதித்தேன் என்னை இப்படி மூடிட்டியே என்று விருமாண்டி கேட்க, பேச்சியம்மன் அண்ணா நீ கேட்கிற கர்ப்பிணி உள்ள பெண்ணையும் கர்பனி மாட்டையும் என்னால் கொடுக்க முடியாது நான் உனக்காக கர்ப்பமாக இருக்கும் ஒரு ஆட்டை மட்டும் படையலாக படைக்கிறேன். அதுவும் ஆடி வெள்ளி உச்சி பூஜை அன்று மட்டுமே நான் படைக்கிறேன் என்று சொல்லி அவரை அடக்கி விடுகிறார். அந்த ஒரு நாள் மட்டுமே விருமாண்டி அந்த கிணத்திற்குள் இருந்து வெளியே வருவதாகவும் அந்த ஆட்டை படையல் ஆக பெற்றுக் கொள்வதாகவும் நம்பப்படுகிறது. இதுதான் இந்த கதை உருவாக காரணமாக இருக்கிறது.

99
Sivakarthikeyan Seyon Movie

இப்படத்தில் எதிர்பார்ப்பது: கதையில் வருவது போல விருமாண்டி வழிபடுபவர்கள் முருகனை வழிபடுவார்களா? அல்லது முருகனை வழிபடாமல் அதனை தடுப்பவர்களால் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துக்காட்டுவார்களா? என்பதனை இந்த படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். சிவக்குமார் இந்த படத்தை எப்படி மயககருத்தை கொண்டு வருகிறார் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories