எனக்கு மூளை ரொம்பவே கம்மி தான்; போன கூட யூஸ் பண்ண தெரியாது: வெகுளியா பேசிய டான் சிவகார்த்திகேயன்!

Published : Dec 02, 2025, 06:58 PM IST

Sivakarthikeyan Very Low Brain:சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மூளை ரொம்பவே கம்மி என்றும், சோஷியல் மீடியா என்றால் பயம் என்றும், என்னுடைய போனை கூட எனக்கு சரிவர பயன்படுத்த தெரியாது என்றும் பேசினார்.

PREV
15
சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் சிவகார்த்திகேயன். அமரன் படத்திற்கு முன்பு வரை காமெடி ஹீரோவாக வலம் வந்த அவருக்கு அமரன் ஆக்‌ஷன் ஹீரோ என்ற ஒரு அடையாளத்தை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக்கியது. இந்தப் படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் உயர்ந்தது மட்டுமின்றி சினிமாவில் அவரது ரேஞ்சும் மாறியது. இப்போது இவரது நடிப்பில் பராசக்தி படம் வெளியாக இருக்கிறது.

25
fanly என்ற ஆப் அறிமுக விழா

இந்த நிலையில் தான் சென்னையில் நடந்த fanly என்ற ஆப் அறிமுக விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் இணையதளம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. அதை சிலர் முக்கியமான விஷயங்களுக்கும் சிலர் தேவையற்ற விஷயங்களுக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், எனக்கு இணையதள பயன்பாடு, சமூக வலைதளம் பற்றி அந்தளவிற்கு தெரியாது. போன் பாஸ்வேர்டை கூட அடிக்கடி மறந்து விடுவேன். நல்ல வேலையாக பேஸ் ஐடி வந்தது மூலம் நான் தப்பித்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

35
எனக்கு மூளை கம்மி

மூளை கம்மியாக இருப்பதால்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன் இல்லையென்றால் நான் டைரக்டர்களை டார்ச்சர் செய்து ஏன் இந்த சீன் இப்படி வருகிறது. இந்த சீனில் தேவையில்லாத காட்சிகள் இருக்கிறது என்று கூறி இருப்பேன். என்னுடைய ரசிகர்கள் தான் என்னுடைய குடும்பம். அப்படிப்பட்ட ரசிகர்கள் நெகட்டிவிட்டியை ஃபில்டர் ஆக்கி பாசிட்டிவிட்டியாக இருக்கணும். என்னுடைய ரசிகர்கள் கடவுள் அம்மா அப்பா மட்டும்தான் வணங்க வேண்டும். என்னை நண்பராக பார்க்கிற ரசிகரும் நல்லா பழகுற பேன்ஸும் தான் எனக்கு வேண்டும். எனக்காக தேவையற்ற செலவுகளை செய்து குடும்பத்தை சரியாக கவனிக்காமல் இருந்தால் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.

45
எனக்கு சோசியல் மீடியா என்றால் பயம்

எனக்கு சோசியல் மீடியா என்றால் பயம். அதில் நான் பேசுவதை விட தேவையில்லாத கருத்துக்கள் ட்ரோல்கள் மீம்ஸ்கள் வதந்திகள் பரவிக் கொண்டிருக்கும். இதனால் நான் சோசியல் மீடியா எல்லா அக்கவுண்டையும் நான் கவனிப்பதில்லை. என்னுடைய அட்மின் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் அவ்வப்போது இன்ஸ்டாகிராமை மட்டும் உபயோகப்படுத்துவேன். அன்றைக்கு தெரியாமல் இன்ஸ்டாகிராமில் ஒரு பட்டனை அழுத்தி விட்டேன். அது ரீ போஸ்ட் ஆகிவிட்டது. அதற்கு என் நண்பர் எனக்கு கால் செய்து நீயா அதை நீ போஸ்ட் செய்தாய் என்று கேட்டால் இல்லை நான் அதை செய்யவில்லை தெரியாமல் கை பட்டு விட்டது. அந்த அளவுக்கு தான் என்னுடைய சோசியல் மீடியா நாலேஜ். எனக்கு மொபைல் போனையும் சரி வர இயக்க வைக்க தெரியாது என்று பேசினார்.

55
சிவகார்த்திகேயன் மூளை கம்பி

நிறைய ஆப்ல நெகட்டிவிட்டி தான் இருக்கு . நம்ம எல்லாரையும் திரும்ப பேச வைக்கிற மாதிரி கொண்டு வந்திருக்காங்க அதனால் இந்த ஃபேமிலியா நல்ல இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories