தீவிர யோசனையில் கதிர் அண்ட் ராஜீ: அண்ணனுக்கு என்ன ஆச்சு? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!

Published : Dec 02, 2025, 04:35 PM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 652ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்வோம்.

PREV
16
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இதில் பாண்டியனுக்கு எதிராக பழனிவேல் காந்திமதி ஸ்டோர்ஸ் கடையை திறந்து நல்லபடியாக வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். வியாபாரமும் நல்லாவே நடப்பதாக சுகன்யா குஷியில் இருக்கிறார். இது பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையின் அடுத்த பிரான்ச் என்று சொல்லி சொல்லி தான் வியாபாரமும் செய்து வருகிறார்.

26
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 652ஆவது எபிசோடு

சரி, இன்றைய 652ஆவது எபிசோடில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம். நேற்று மீனா மற்றும் செந்தில் தொடர்பான காட்சியுடன் முடிந்த நிலையில் இன்றும் அதே காட்சியுடன் தான் சீரியல் தொடங்கியது. இதில், செந்திலை ஒவ்வொரு வேலையாக செய்ய வைத்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு ராஜீயை ரன்னிங் பிராக்டிஸிற்கு கதிர் கூட்டிக் கொண்டு வந்தார்.

36
சரவணன் மற்றும் தங்கமயில் பஞ்சாயத்து

அப்போது இருவரும் சரவணன் மற்றும் தங்கமயில் தொடர்பான பிரச்சனைகள் பற்றி பேசிக்கொண்டனர். இதில் ஒருநாள் மயில் சொன்ன நகை மேட்டர் குறித்து ராஜீ நினைத்துக் கொண்டிருந்தார். பிறகு வீட்டில் உள்ளவர்கள் அதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிப்பார்கள் என்று ஒரு முடிவுக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து அரசி மற்றும் குமரவேல் தொடர்பான காட்சி ஒளிபரப்பானது. இதில், அரசியை வம்புக்கு இழுத்த குமரவேலுவை அவரது அப்பத்தா திட்டினார். நீ இவ்வளவு பிரச்சனை பண்ண பிறகு எப்படி அவள் உன்னிடம் பேசுவாள். இனிமேல் உன்னிடம் பேசுவதற்கு வாய்ப்பே இல்லை என்றார்.

46
செந்தில் மற்றும் மீனா:

வீட்டில் மாவு அரைத்தால் தான் சரியாக இருக்கும். கடையில் மாவு வாங்கினால் இட்லி கல்லு மாதிரி இருக்கு. இட்லி சப்புன்னு இருக்கு என்று இருவரும் பேசிக் கொண்டனர். ஒரு டிபன் கூட ஒழுங்கா வைக்க தெரியவில்லை. இந்த சூழலில் அத்தை கோமதிக்கு மீனா போன் போட அங்கு என்ன சமையல் என்று கேட்டார். அதற்கு ஆப்பமும், தேங்காபாலும் செய்யலாம் என்று நினைத்தேன். அதற்கு ராஜீ தான் முட்டைக்குருமா வேண்டும் என்று கேட்டார். அதான் முட்டைக்குருமா செய்து கொண்டிருக்கிறேன் என்றார். மேலும், மதியானத்துக்கு பெருசு பெருசா நண்டு கிடைத்தது. அதை தொக்கு செய்யப் போகிறேன் என்று சொல்ல சொல்ல மீனாவிற்கு நாக்கில் எச்சில் ஊறியது.

56
பாம்புக்கு பால் வார்த்த பாவம்

கடைசி காட்சியாக கோமதி மற்றும் பழனிவேல் என்று அக்கா தம்பி காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், அக்கா, அக்கா என்று பழனிவேல் கூப்பிட்டுக் கொண்டே இருக்க கோமதி திரும்பிக் கூட பார்க்கவில்லை. பாம்புக்கு பால் வார்த்தேன் அதான் கோயிலுக்கு சென்று பாவத்தை போக்கிட்டு வருகிறேன். நான் உனக்கு எப்போதும் துரோகம் செய்யமாட்டேன். மனசால் கூட உங்களுக்கு துரோகம் செய்யமாட்டேன் என்று பழனிவேல் பேச ஆரம்பிக்க கோமதி பேசவே இல்லை.

66
பழனிவேல் தம்பி மட்டும் அல்ல மூத்தபிள்ளை

கோபத்தில் வெறும் வார்த்தையால் மட்டுமே பழனிவேலுவை திட்டினாரே தவிர, அவன் என்னுடைய தம்பி மட்டுமில்ல, அவன் என்னுடைய மூத்தபிள்ளை என்று சொல்லி கண்ணீர்விட்டு அழுதார். நமக்கு துரோகம் செய்தாலும் அவன் நல்லா இருக்கட்டும். நல்லா வரவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்றார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிந்தது. அடுத்ததாக என்ன நடக்கிறது என்பது பற்றி நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories